a

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!


இந்தியாவில் ஒரேவாரத்தில் கொரோனா பாதிப்பு 23% குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஒரு வாரத்தில் உலக அளவில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது.

உலகளவில் புதிதாக 41 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 84 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பில் 14 சதவீதமும் உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலக அளவில் 53 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன. முதலாவது வகை 43 நாடுகளிலும், இரண்டாவது வகை 54 நாடுகளிலு,ம் மூன்றாவது வகை 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

Also Read  144 தடை உத்தரவு - சாரை சாரையாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!

இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வைரஸ் அதிகமாக பரவும் சக்தி கொண்டதாகவும் நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தி மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இது 23 சதவீதம் குறைவாகும்.

Also Read  தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

உலக அளவில் கடந்த 4 வாரங்களாக கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனால் உயிரிழப்பு தொடர்ந்து பலநாடுகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 28 ஆயிரத்து 292 பேர் உயிரிழந்தனர். இது 4 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

கடந்த சில நாட்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் நிலவும் பெருந்தொற்று சூழல் கவலை அளிப்பதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் உயிரிழப்பு…!

Lekha Shree

இந்தியாவிற்காக ஒளியூட்டப்பட்ட நயாகரா நீர்வீழ்ச்சி! – கண்கவர் புகைப்படம்

Shanmugapriya

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

இந்தியாவில் அமெரிக்க ஆப்பிள்களின் இறக்குமதி வரி அதிகரிப்பு… உள்நாட்டு விவசாயிகள் மகிழ்ச்சி!

Tamil Mint

பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது:

Tamil Mint

கல்லூரி களில் நவம்பர் 1ந்தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

Tamil Mint

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்: ராஜ்நாத் சிங்

Tamil Mint

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி போட எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்..?

Ramya Tamil

4 இஸ்லாமிய குடும்பங்களுக்காக மசூதி கட்ட முடிவெடுத்த கிராம மக்கள்!

Shanmugapriya

18+ அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது…! தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள்…!

Devaraj

பிரதமர் மோடியின் அயோத்தி நிகழ்ச்சி நிரல்:

Tamil Mint