a

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கும் கொரோனா சான்று கட்டாயம்…!


கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், சென்னையில் இருந்து உள்நாட்டுக்குள் விமானப் பயணம் செய்யவும் கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என விதிமுறை நடைமுறையில் உள்ளது.

Also Read  பெண்கள் விவகாரம்: மோடியை சாடிய கனிமொழி எம்.பி.,!

இந்த நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், மேற்குவங்கம், குஜராத் மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு பயணிகளுக்கும் கொரோனா சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரத்துக்கு 72 மணி நேரத்திற்கு முன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர்., அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்ற சான்று பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Also Read  “இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு" - தமிழக அரசு

கொரோனா பரிசோதனை சான்றிதழை, விமான நிறுவன கவுன்டர்களில் சமர்ப்பிப்போருக்கு மட்டுமே விமானத்தில் பயணம் செய்வதற்கான போர்டிங் பாஸ் வழங்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனி விமானங்களில் மூலம் இந்த ஆறு மாநிலங்களுக்கு பயணம் செய்வோருக்கும், இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read  ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி - அரசு மருத்துவமனையில் அவலம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆபத்தான நிலையில் இருக்கிறாரா கே பி அன்பழகன் ?

Tamil Mint

ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

Tamil Mint

பிரபல யானை ஆர்வலர் அஜய் தேசாய் மறைந்தார்

Tamil Mint

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளின் அப்பட்டமான மனித உரிமை மீறல் !?

Tamil Mint

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி:

Tamil Mint

“2ம் அலை கைமீறிவிட்டது” – கொரோனாவின் கோரப் பிடியில் தமிழகம்!

Lekha Shree

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Tamil Mint

ராஜ் பவனை சுழற்றி அடிக்கும் கொரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர்

Tamil Mint

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை

Tamil Mint