a

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.46 லட்சமாக உயர்வு..!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3.46 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

Also Read  கொரோனா பரவல் தடுப்பு - கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  மனைவியின் நடத்தையில் சந்தேகம்! - பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த கணவர்! - அதிர்ச்சி சம்பவம்!

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,602,456 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 189,549 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,862,119 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  ஏறுமுகத்தில் கொரோனா - வார இறுதியில் ஊரடங்கு..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.46 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,624 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.66 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதி பிரமோற்சவம் எப்போது, எப்படி நடக்கும்? புதிய தகவல்கள்

Tamil Mint

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

மேடையிலேயே மயங்கி விழுந்த குஜராத் முதலமைச்சர்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

உத்தரகாண்ட் நிவாரணப் பணிக்கு ஊதியத்தை வழங்கிய ரிஷப் பந்த்!

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

Lekha Shree

மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு

Tamil Mint

கூகுள் சார்பாக இந்தியாவுக்கு ரூ.135 கோடி மதிப்பிலான உதவிகள்! – சுந்தர் பிச்சை

Lekha Shree

தில்லி, குஜராத்தில் கொரோனா நிலவரம் எல்லை மீறி செல்கிறது: உச்ச நீதிமன்றம்

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டுவீட் – பெண் சுற்றுச்சூழலியல் ஆர்வலர் கைது!

Tamil Mint

விவசாயிகளின் உயிரிழப்புக்கு மத்திய அரசின் புறக்கணிப்பே காரணம்: சோனியா காந்தி

Tamil Mint

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree