a

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.32 லட்சமாக உயர்வு..!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3.32 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Also Read  இந்தியா: 2 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..!

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது.

அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்த ஆண்டு 2வது முறையாக உயர்ந்த ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை..!

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,263,695 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 186,928 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,648,159 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.32 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,263 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.62 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“சீனாவின் கைப்பாவை…. டிக் டாக் செயலியைப் போல ட்விட்டரும் தடை செய்யப்படும்” – கங்கனா ரனாவத்

Tamil Mint

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

15,000 பள்ளிகளை தரம் உயர்த்த பட்ஜெட்டில் முடிவு

Tamil Mint

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

பெண் போலீஸ் மர்ம மரணம் – இணையத்தில் வைரலாகும் #justice_for_rupa_tirkey

sathya suganthi

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya

பாஜக எம்பிக்கு சொந்தமான இடத்தில் 30 ஆம்புலன்ஸ்கள்; அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

“குட்டி சிரு வந்துவிட்டார்” – மகன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மேக்னா ராஜ்

Tamil Mint