a

புதிய உச்சம் தொட்ட கொரோனா! – தினசரி பாதிப்பு 3.52 லட்சமாக உயர்வு..!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் 3.52 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

Also Read  முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் - மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளின் கண்களை குறிவைக்கும் கருப்பு பங்கஸ்…! பார்வை பறிபோகும் அபாயம்...!

தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் புதிய கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரம் குறையாததால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,313,163 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 195,123 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,304,382 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்து 3.52 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.73 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சடலங்களை எரியூட்ட நடமாடும் தகன மேடை!

Lekha Shree

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்கினால் தள்ளுபடி! – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

Lekha Shree

டெல்லி வன்முறை: “300க்கு மேற்பட்ட காவலர்கள் காயம்” – டெல்லி போலீஸ் தந்த அதிர்ச்சி தகவல்!

Tamil Mint

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

Tamil Mint

மத்திய பட்ஜெட் 2021: 1 காப்பீட்டு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகிறது!

Tamil Mint

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan

வங்கி கடன்கள்: நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

Tamil Mint

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

தனியாரின் பகல்கொள்ளை.. உலகளவில் இந்தியாவில் தான் கொரோனா தடுப்பூசியின் விலை அதிகம்..

Ramya Tamil

சிக்கலில் லட்சுமி விலாஸ் வங்கி, அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

Tamil Mint

யாருக்கும் தலை வணங்க மாட்டேன்: ராகுல்காந்தி ஆவேசம்

Tamil Mint