a

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!


இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அடுத்த பத்து நாட்களுக்குள், அதாவது மே 4, 8 தேதிக்குள் சுமார் 3.4 லட்சம் முதல் 4.4 லட்சத்தை தொடும் என ஐஐடி விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

மேலும் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை மே 14, 18 தேதிக்குள் 38-48 லட்சத்தை தொடும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது - அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு மே மாத இறுதியில் வியக்கத்தக்க வகையில் குறையும் என ஐஐடி விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஹைதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடியை சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மே மாதம் 11 முதல் 15 தேதி வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டு பின்னர் மே மாதம் இறுதியில் ஆச்சரியப்படும் வகையில் குறையும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானி மணீந்தர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Also Read  அச்சுறுத்தும் கொரோனா: தஞ்சை பெரியகோயில் மூடல்

இந்தியாவில் தற்பொழுது 24 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மே மாதம் 11 முதல் 15 தேதி வரையிலான நாட்களில் அந்த எண்ணிக்கை 38 முதல் 48 லட்சம் வரை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.52 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,313,163 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 195,123 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,304,382 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  "ஆக்சிஜன் தராவிடில் டெல்லி சீரழிந்துவிடும்!" - மாநில அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மார்ச்-ல் இருந்து மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Tamil Mint

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்; யாரை காக்க இந்த புதிய நாடாளுமன்றம்? – கமல்ஹாசன்

Tamil Mint

சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

Tamil Mint

உ.பி.முதலமைச்சர் யோகியிடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்…! – என்ன கோரிக்கை தெரியுமா?

Devaraj

ஏன் தாமதமாக வந்தாய் என கேட்ட தாயை கொலை செய்த மகன்! – அதிர்ச்சி சம்பவம்

Tamil Mint

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

Lekha Shree

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா…! ஊரடங்கு புதிய அறிவுப்புகளுக்கு வாய்ப்பு…!

Devaraj

ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! – மத்திய அரசு அதிரடி

Shanmugapriya

ஐபிஎல் தொடரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருது பெற்ற வீரர்கள் விவரம்: 

Tamil Mint

உ.பி யில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் குடிநீர் திட்டம்

Tamil Mint