a

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,000-ஐ எட்டும்! வெளியான அதிர்ச்சி தகவல்!


தமிழகத்தில் வரும் நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 60,000 வரை எட்டும் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் தெரிவித்துள்ளார்.

இதனால் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை பல்லவன் சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வாரம் ஏழு நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.

அதை திறந்து வைத்த பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது, “சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் 70% பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். சென்னையில் முன்களப் பணியாளர்கள் 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். 90% முன்களப் பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளனர்” என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் ரெம்டேசிவர் மருந்து 100% இருப்பு உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே தட்டுப்பாடு இருப்பதாகவும் மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்தார்.

Also Read  தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5.70 லட்சம் கோடியாக உயர்வு

அதைத்தொடர்ந்து பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், “தமிழகத்தில் வரும் நாட்களில் தினசரி கொரோனா பாதிப்பு 60,000 வரை எட்டும். இதனால் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… பலத்த காற்றுடன் மழை நீடிப்பு..!

Tamil Mint

மக்களே இரவு நேர ஊரடங்கிற்கு தயாராகுங்கள்? – தமிழக முதல்வர் இன்று அவசர ஆலோசனை!

Lekha Shree

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

”திமுக ஆட்சிக்கு வந்தால் மணல் அள்ளலாம்” – செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை! அதிமுக புகார்!

Lekha Shree

கத்தரி வெயிலுக்கு மத்தியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை…!

sathya suganthi

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் இவரா?

Tamil Mint

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil

அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல –

Tamil Mint

ஊரடங்கு முழுவதுமாக நீக்கப்படுகிறதா? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

Tamil Mint

கிசான் திட்டத்தை நிறுத்திய தமிழக அரசு

Tamil Mint

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

குடியரசு தின வாழ்த்து: தவறான தேசியக் கொடியை பதிவிட்ட நடிகை குஷ்பு – மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் பதிவு!

Tamil Mint