a

‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு…!


கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. என்றும் இல்லாத உச்சக்கமாக இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்திருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 4,01,993 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணிநேரத்தில் 3,523 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் பிக்ரம்ஜீத் கன்வர்பால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 52.

ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் கடந்த 2003ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வந்தார். இந்தியில் வெளியான பேஜ் 3, கார்ப்பரேட், கியா லவ் ஸ்டோரி ஹே, ராக்கெட் சிங் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் சமந்தாவின் தந்தையாக நடித்து இருந்தார். ஏராளமான இந்தி தொடர்களிலும் நடித்துள்ளார்.

Also Read  விஜய்யின் நெருங்கிய உறவினர் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் திமுக நிர்வாகி மகன்...!

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு இந்தி திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘வலிமை’ குறித்து வாய் திறந்த போனி கபூர்… செம்ம ஹேப்பி மோடில் தல ஃபேன்ஸ்

Tamil Mint

‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

“தளபதி 65” 2ம் கட்ட படப்பிடிப்பு : படக்குழு எடுத்த முக்கிய முடிவு…!

sathya suganthi

செல்வராகவனுக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்: எதற்கு தெரியுமா?

Tamil Mint

தீயாய் பரவும் ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்… தனுஷ் ரசிகர்களுக்கு வேற லெவல் ட்ரீட்..!

Lekha Shree

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

ராஷ்மிகா பிறந்தநாளுக்கு வீடியோவுடன் வாழ்த்திய முன்னாள் காதலர்! ராஷ்மிகாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Lekha Shree

அது மட்டும் பண்ண மாட்டேன்: சாரி சொல்லும் சாய் பல்லவி

Tamil Mint

நடிகர் பிரபாஸின் ‘சலார்’ பட ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

Lekha Shree

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை புகழ்ந்த டோலிவுட் முன்னணி ஹீரோ!!!

Lekha Shree

காதல் கணவருடன் இணைந்து புது பிசினஸ் தொடங்கிய பிரியங்கா சோப்ரா… எங்கு தெரியுமா?

malar