a

“ஆக்சிஜன் இன்றி மக்கள் பலி… இனப் படுகொலைக்குச் சமம்..” – உ.பி. நீதிமன்றம் சாட்டையடி கருத்து


ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்கு சமம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பால் உடல் மோசமாகி இறப்பவர்களை விட, சரியான மருத்துவம், படுக்கைகள் இன்றியும் ஆக்சிஜன் கிடைக்காமலும் இறப்பவர்களே அதிகமாக உள்ளது.

உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட பின்தங்கிய மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் நாளுக்கு நாள் கொத்து கொத்தாக மக்கள் பலியாகிக் கொண்டு இருக்கிறார்.

உத்தர பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பல்வேறு பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில், அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோரின் அமர்வு இந்த பொது நல வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

Also Read  18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி - இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த செய்திகளை படிக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் வலி மிகுந்த வேதனையில் நாங்கள் இந்த வழக்கை விசாரிக்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நேரத்தில் கொடுக்காமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்றும் அது ஒரு இன படுகொலைக்கு சமமான குற்றம் என்றும் மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கு - இருவர் கைது!

மக்கள் சாலையில் நின்று ஆக்சிஜனுக்கு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளிடம் மக்கள் கையேந்தி நிற்கிறார்கள் என்றும் மக்களை எப்படி உங்களால் இப்படி சாகவிட முடிகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.

மீரட் மருத்துவ கல்லூரி, லக்னோவில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்ததாக செய்திகளும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியான நிலையில், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மக்கும் முகக்கவசம் – தொண்டு நிறுவனத்தின் அசத்தலான முயற்சி…!

Lekha Shree

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் தேர்வு

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

Tamil Mint

ஜனவரி 31-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் – மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

வீட்டில் இருந்ததோ ஒரே ஒரு பல்பு! – கரண்ட் பில்லோ ரூ. 12,500!

Shanmugapriya

காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

Tamil Mint

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

அமிதாப்பச்சனுக்கு கொரோனா

Tamil Mint

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree