a

பூனைகளை கொரோனா எளிதில் தாக்கும்…! செல்லப்பிராணி வளர்ப்போருக்கு உஷார் அட்வைட்ஸ்…!


கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கப்படும் சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கிட்டத்தட்ட 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஒரு சிங்கம் உயிரிழந்துள்ளது.

Also Read  தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் செய்ய வேண்டியதும்..! கூடாததும்…!

இந்த நிலையில், இதுபோல் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா பரவுமா என சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ், விலங்குகளை பொறுத்தவரையில் எல்லா விலங்குகளையும் தாக்காது என்றும் குறிப்பாக பூனை இனத்தை சேர்ந்த பூனை, புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை எளிதில் தாக்கும் என்றும் விலங்குகள் நல மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.

Also Read  கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் - கதிகலங்க வைக்கும் காட்சிகள்

கொரோனா வைரசால் எளிதில் தாக்கும் விலங்குகளின் பட்டியலில் இவைதான் முதல் இடத்தில் இருப்பதால், உடனடியாக பாதிப்புக்குள்ளாகின்றன என்றும் இதுபோல், கீரி, எலி, குரங்கு உள்ளிட்ட இனங்களிலும் குறிப்பிட்ட சில வகையை கொரோனா வைரஸ் தாக்குகிறது என்றும் நாய், கிளி, பன்றி, கோழி, வாத்து, வான்கோழி, பிராய்லர்கோழி இனங்களுக்கு இந்த நோய் தொற்று வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அவற்றுக்கு இயற்கையாகவே இந்த வைரசை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது என்றும் இதுபோல், செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு பரவும் வாய்ப்பும் மிகக்குறைவு என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  உத்தரப்பிரதேசத்தில் கொரோனா முகாம்களாக மாற்றப்படும் மசூதிகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

72-வது மற்றும் 2020-ம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர் மோடி

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 16.5.2021

sathya suganthi

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது OTT தளங்கள் மற்றும் ஆன்லைன் செய்தி தளங்கள்

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 61,775 பேர் குணமடைந்துள்ளனர்

Tamil Mint

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

புதுச்சேரி முதலமைச்சருக்கு கொரோனா…! தள்ளிப்போகும் அமைச்சரவை பதவியேற்பு…!

sathya suganthi

அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் – சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி

Tamil Mint

கொரோனாவின் கோரத்தாண்டவம் – இந்தியாவுக்கு உதவ முன்வந்த உலக நாடுகள்..!

Lekha Shree

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி – அரசு மருத்துவமனையில் அவலம்

Devaraj

பால்கனியில் இருந்து தடுமாறி கீழே விழுந்த நபரை நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! – வைரலாகும் சிசிடிவி காட்சி

Shanmugapriya

கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்!

Shanmugapriya