இந்த 5 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு – ஆய்வு நடத்த ஆட்சியர்களுக்கு உத்தரவு…!


தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக கொரோனா குறைந்துள்ளது.

அதே சமயம், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணத்தை ஆராய்ந்து, மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Also Read  பா.ஜ.க கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்த முதல்வருக்கு நன்றி: தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

ஊரடங்கு தளர்வுகளின் தாக்கம், அடுத்த சில நாள்களில் தான் தெரியும் என்பதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, தொடர்ந்து தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கூடும் இடங்களில், அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகளில் நோய் தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றும் சில மாவட்டங்களில் வழக்கத்தை விட, குறைவான மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும், இரண்டு நாட்களை விட, அதிகமான எண்ணிக்கையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read  தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் முதல் பலி - மேலும் பலருக்கு சிகிச்சை

தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணம் என்ன; எந்த இடத்தில் இருந்து தொற்று அதிகமாக பரவுகிறது என்ற விபரங்களை, சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள் கண்டறிந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட “இந்தி ஆலோசனை குழுவில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் இடம் பிடித்துள்ளார்.

Tamil Mint

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது உதயநிதி தாக்கு

Tamil Mint

காரீஃப் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது – உணவுத்துறை அமைச்சர் காமராஜ்.

Tamil Mint

“ஸ்டாலினை தேர்தலில் பாஜகவின் சாதாரண தொண்டரே தோற்கடிப்பார்!” – கராத்தே தியாகராஜன்

Lekha Shree

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன்..!

Lekha Shree

நலவாழ்வு முகாமுக்கு உற்சாகத்துடன் புறப்பட்ட கோவில் யானைகள்

Tamil Mint

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

sathya suganthi

ஊரடங்கில் மேலும் தளர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

sathya suganthi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

Lekha Shree