a

முழு ஊரடங்கு – வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்…!


தமிழகத்தின் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடுமையாக்கி உள்ளது. அந்த வகையில், கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு, தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடிக்கிடந்தன.

Also Read  280 நிறுவனங்கள் திவால்...! - மத்திய அமைச்சர் தகவல்

மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் இன்று திறக்கப்படவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தி.நகர், பாரிமுனை, புரசைவாக்கம், மூலக்கடை, மாதவரம், செங்குன்றம், அரும்பாக்கம், கோயம்பேடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையோரக் கடைகளில் கூட்டம் அலைமோதும் நிலையில், இன்று சாலைகள் வெறிசோடின.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தைகளும் இன்று நடைபெறவில்லை. சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள், திரையரங்குகள், மால்கள் அனைத்தும் மூடப்பட்டன.

Also Read  முழு ஊரடங்கு பயன் அளிக்கிறதா…! சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்…!

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்கு பயந்து மக்கள் வெளியில் வரவில்லை.

மருந்து கடைகள், மருத்துவமனைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டும் பங்கேற்ற அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Also Read  நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனி!” – சீமான்

Lekha Shree

கொரோனாவால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது – அமைச்சரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை

sathya suganthi

சீமானுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் ரசிகர்கள்

Tamil Mint

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Tamil Mint

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுக் கூட்டத்தினை புறக்கணிக்கிறேன்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

திமுக பதவிக்கு ஒரு கோடி ரூபாய்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

ஒரே பெயரில் பல வாக்காளர்கள்…. முதுகுளத்தோர் தொகுதியில் சுவாரசியம்!

Lekha Shree

அதிமுகவுக்கு 110 போதும்… ஆனால் திமுகவுக்கு 134 தேவை… அமித்ஷா போடும் புதிய கணக்கு!

Lekha Shree

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

வணக்கம் சொன்ன உதயநிதி.. கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி…

Ramya Tamil

முதல்வருக்கு ஸ்டாலின் திடீர் கடிதம்

Tamil Mint