“கல்வி நிறுவனங்களில் கொரோனா ஊசி போட கட்டாயப்படுத்தக்கூடாது” – உயர்நீதிமன்றம்


கல்வி நிறுவனங்களில்  கொரோனா  தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஒரு சிலர்  பாரம்பரிய மருத்துகளை விரும்புவார்கள் என்றும் எனவே கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று  வலியுறுத் கூடாது என்று உத்தரவிடக்கோரி, கல்வி  வள மேம்பாடு  அறக்கட்டளை என்ற அமைப்பு  சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு….!

கொரோனா தடுப்பூசியை தானாகமுன் வந்து செலுத்திக்கொள்ளலாம்  என்று மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், தமிழகத்தில், கல்வி நிறுவனங்களில் கொரோனா  தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்துவதாகவும், இதுகுறித்தான சர்க்குலர்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி,நீதிபதி ஆதிகேவசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Also Read  நீங்கள் தடுப்பூசி போட்டவரா? மாஸ்க் வேண்டாம்; இது அமெரிக்காவில்…!

இந்த மனு பொது நலனுக்கு எதிரானது எனத்தெரிவித்த நீதிபதிகள், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி போட வேண்டும்  என்று தெரிவித்தனர். 

தடுப்பூசியை இலவசமாக போடவேண்டும் என்று உச்சநீதிமன்றம்  வலியுறுத்தியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Also Read  போராடி மறுபிறவி எடுத்தேன்: கண்ணீர் மல்க அமைச்சர் காமராஜ் உரை

இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை  தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

அனுமதித்தால் யாத்திரை, இல்லையென்றால் போராட்டம்: எச் ராஜா ஆவேசம்

Tamil Mint

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: மார்ச் 10 ஆம் தேதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Lekha Shree

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Tamil Mint

கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி டிரான்ஸ்பர்

Tamil Mint

காதல் திருமணம் வழக்கில் அதிமுக எம்எல்ஏவுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு

Tamil Mint

“நவம்பர் 1-ம் தேதி தான் தமிழ்நாடு நாள்” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

விஜய் எம்ஜிஆர் ஆகவே முடியாது, ஜெயக்குமார் காட்டம்

Tamil Mint

எதிர்கட்சியினர் பேசத் தயங்கும் வார்த்தைகளை பேசி தவறு செய்பவர்கள் வருந்துவார்கள் – டிடிவி.தினகரன்

Tamil Mint

VPF கட்டணத் தள்ளுபடி – இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

Tamil Mint

மயிலாப்பூரில் கமல் போட்டி?

Tamil Mint

தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்..!

suma lekha