கொரோனாவில் இறந்ததாக கூறி குழந்தை விற்பனை : மதுரை காப்பகத்துக்கு சீல்…!


மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டியை சேர்ந்த சோனைமுத்து.
இவர் இறந்துவிட்ட நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவரின் மனைவி ஐஸ்வர்யா, ஒரு மகள், 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

சமூக ஆர்வலர் அசாருதீன், மதுரை ரிசர்வ் லைனில் உள்ள ‘இதயம் டிரஸ்ட்’ என்ற முதியோர் காப்பகத்தில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி அவர்களை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யாவின் மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதித்தது.

நரிமேடு நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கடந்த 13ம் தேதி பரிசோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும், குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் காப்பகத்திலிருந்து, அசாருதீனுக்கு தெரிவிக்கப்பட்டது.

திடீரென நேற்று முன்தினம் கொரோனாவால் குழந்தை உயிரிழந்ததாகவும், தத்தனேரி மயானத்தில் மாநகராட்சியினரே அடக்கம் செய்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், தத்தனேரி மயான ஆவணங்கள், புதைக்கப்பட்ட இடத்தில் தாய் ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகள் நடத்திய படங்களையும் சமூக ஆர்வலருக்கு காப்பகத்தினர் அனுப்பி வைத்தனர்.

Also Read  தமிழகத்தில் 3000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

இதையடுத்து அசாருதீன், ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து குழந்தை நல அலுவலர், தாசில்தார், போலீசார் இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. குழந்தை மாயமானதாக அசாருதீன் புகாரில் தல்லாகுளம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதன்பேரில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட மதுரை தத்தனேரி மயானத்தில், அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்ததில், கொரோனா பாதித்து இறந்த குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் இரு நாட்களுக்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மற்றொரு பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பொய்யாக இந்த இடத்திற்கு குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை, காப்பகத்தினர் அழைத்து வந்து, இறுதிச் சடங்கு செய்ய வைத்து, அனைவரையும் நம்ப வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Also Read  தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது: அமைச்சர் திட்டவட்டம்

இந்நிலையில் நேற்றிரவு மதுரை இஸ்மாயில்புரத்தில் ஒரு தம்பதியிடம் இருந்த குழந்தை மாணிக்கத்தையும், கல்மேடு பகுதியில் இருந்த 2 வயதான மேலும் ஒரு பெண் குழந்தை தீபாவையும் மீட்டனர்.

தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசீது எண் போலி எனத் தெரிய வந்தது என்றும் அதே ரசீது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75 வயதான இதே காப்பகத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில், தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு குழந்தையை புதைத்தது போல காட்டியுள்ளனர் என்றும் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை சோதனை செய்ததில், இங்கு 16 குழந்தைகள் இருந்ததும், தற்போது இக்குழந்தைகள் மாயமாகி இருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  தினமும் 20 பரோட்டா: ஹோட்டல் வந்து சாப்பிட்டு போகும் கோயில் காளை.

இதையடுத்து, இந்த குழந்தைகள் உடலுறுப்புகளுக்காக விற்கப்பட்டு, கடத்தப்பட்டதா அல்லது குழந்தைகள் இல்லாதவர்களுக்கு இந்த காப்பகம் மூலம் விற்கப்பட்டதா என்ற நிலையில் தனிப்படை விசாரணையை தீவிரப்படுத்தியது.

புகாருக்கு உள்ளான காப்பக பொறுப்பாளர் சிவகுமார் மற்றும் இங்கிருந்த கலைவாணி, மாதர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை தேடி 2 தனிப்படை விரைந்துள்ளன

மதுரை ரிசர்வ்லைனில் உள்ள காப்பகத்தில் இருந்தவர்களில் 90 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 26 பேர் உடல்நலமின்றி இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்றிரவு மாவட்ட ஆட்சியரின் உத்தரவு பேரில் இந்த காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அக்.1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனுமதி.

Tamil Mint

பயணிகள் நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

Tamil Mint

கணீர் குரலில் விஜயகாந்த் பிரச்சாரம்! – புதிய யுக்தியை கையாளும் தேமுதிக!

Lekha Shree

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள்

Tamil Mint

பெண் காவலர்களுக்கான ஸ்பெஷல் உத்தரவு – டிஜிபி திரிபாதி அதிரடி…!

sathya suganthi

“லாட்டரிச் சீட்டு திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

ஆ.ராசா சர்ச்சை பேச்சு… நழுவுகிறதா திமுக வெற்றி வாய்ப்பு?

Lekha Shree

பள்ளிகளை தற்போது திறக்க முடியாது: அமைச்சர்

Tamil Mint

தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்:

Tamil Mint

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய முகாம்

Tamil Mint

கனமழையால் நிரம்பி வழியும் தமிழக ஏரிகள்

Tamil Mint

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint