11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்…! முழு விவரம் இதோ…!


தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை அதிகமான நிலையில், கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் பல தளர்வுகளை அறிவித்ததுடன், 7-வது முறையாக ஊரடங்கை ஜூலை 5 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டித்து உள்ளார்.

அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பாதிப்பு அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகளின் முழு விவரம் இதோ…!

தேநீர்க் கடைகளில் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

மின் பொருட்கள், பல்புகள்,கேபிள்கள் ,ஸ்விட்சுகள் மற்றும் ஓயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 2 மணி வரை அனுமதிக்கப்படும்.

ஹார்டுவேர் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7,00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

பாத்திரக் கடைகள், பேன்ஸி, அழகு சாதனப் பொருட்கள், போட்டோ வீடியோ.சலவை தையல் அச்சகங்கள் ஜெராக்ஸ் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read  தமிழகத்தின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

மிக்சி,கிரைண்டர்,தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
கணினி வன்பொருட்கள், மென்பொருட்கள், மின்னனுசாதனங்களின் உதிரிபாகங்கள் (Computer Hardware,Software, Electronic Appliances Spare Parts) விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

Also Read  மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

இதர அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

சார் பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தானியங்கி பணம் வழங்கும் (ATM) சேவைகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் அதன் செயல்பாடுகள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்கள் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

இதர தொழிற்சாலைகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

வீட்டு வசதி நிறுவனம் (HFCS) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs), குறு நிதி நிறுவனங்கள் (MFIs) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்துவகை கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமலும், ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காலை 6.00 மணி முதல் மாலை விளையாட்டு பயிற்சி குழுமங்கள் இயங்கவும், பார்வையாளர்கள் இல்லாமல் திறந்த வெளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், அனுமதிக்கப்படும்.

Also Read  “ திமுக தொண்டர்கள் இதுபோன்ற துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது..” கண்டித்த ஸ்டாலின்

பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்.

அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் காலை 6.00 மணி முதல் காலை 9,00 மணி வரை நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

இ-சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும். மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும், உணவகங்கள் அடுமணைகளில் (hotels, restaurants. மற்றும் and bakeries) பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் (E-commerce) அனைத்தும் காலை 06.00 மணி முதல் இரவு 09.00 வரை இயங்கலாம்.

திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும்.
திறந்த வெளியில் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா RTPCR பரிசோதனை’ மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில், தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் திமுக தான்!” – முதல்வர் பழனிசாமி

Lekha Shree

மு.க.ஸ்டாலினுக்காக நாக்கை அறுத்து பெண் நேர்த்திக்கடன்…!

sathya suganthi

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசி – அசத்தும் கனிமொழி எம்பி!

Lekha Shree

இது தெரிந்தால் போதும்…. எளிய முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… நீங்களும் பயன்படுத்தி பாருங்கள்….

VIGNESH PERUMAL

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி விடுவிப்பு

Tamil Mint

‘லட்சத்தீவை காப்பாற்றுங்கள்!’ – தமிழகத்தில் இருந்து ஒலித்த ஆதரவு குரல்கள்!

Lekha Shree

முதலமைச்சரை சந்தித்த சீமான்… காரணம் இதுதான்..!

Lekha Shree

பிற்பகல் 1 மணி வரை காய்கறி, பழங்கள் விற்பனை – உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

ஊரடங்கு காலத்தில் மின் தடை இருக்காது – தமிழக அரசு

sathya suganthi

உதயசூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகளை போட்டியிட நிர்பந்தமா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

Tamil Mint