தென்னிந்தியாவில் ‘கொரோனா தேவி’… வடஇந்தியாவில் ‘கொரோனா மாதா’! – உ.பி.யில் வினோதம்!


உத்தரபிரதேசத்தில் கொரோனாவை விரட்ட ‘கொரோனா மாதா’ எனும் கோயில் கட்டி கிராம மக்கள் வழிபடுகின்றனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் ‘கொரோனா தேவி’ என்ற வார்த்தை பிரபலமடைந்தது. கோவை அருகே காமாட்சிபுரத்தில் உள்ள 51வது சக்தி பீடத்தில் புதிதாக கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

Also Read  இந்த ரெம்டெசிவிர் மருந்துகளை பயன்படுத்திவிடாதீர்கள் - தயாரிப்பு நிறுவனமே சொன்ன அதிர்ச்சி தகவல்…!

இது தொடர்பாக காமாட்சிபுரம் ஸ்ரீ சிவலிங்கேஷ்வரா ஸ்வாமிகள் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரசால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதை கருத்தில் கொண்டு கொரோனா தேவி சிலையை வடிவமைத்து பூஜை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களிடம் இருந்து தப்பிக்க மாரியம்மன், காளியம்மன் சிலைகளை உருவாக்கி மக்கள் எப்படி வழிபட்டார்களோ அது போல இந்த கொரோனா தேவி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Also Read  சென்னை டு பாரிஸ் - நேரடி விமான சேவை தொடக்கம்..!

கொரோனா வைரஸ் ஒழிய 48 நாட்களுக்கு மகா யாகம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சக்தி பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தற்போது உத்தரபிரதேசத்தில் கொரோனாவை விரட்ட ‘கொரோனா மாதா’ எனும் கோயில் கட்டி கிராம மக்கள் வழிபடுகின்றனர். கொரோனா மாதாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Also Read  பழங்குடியின மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று கரையை கடக்கும் ‘யாஸ்’ புயல்…!

Lekha Shree

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 – 48 லட்சத்தை தொடும்..!

Lekha Shree

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி!

Lekha Shree

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?

Ramya Tamil

கொரோனா தணியும் வரை ஊரடங்கு வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Shanmugapriya

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க 69,000 கிலோ நாட்டுச்சர்க்கரை கொள்முதல்

Jaya Thilagan

உன்னாவ் சிறுமிகள் கொலை வழக்கு – இருவர் கைது!

Lekha Shree

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – புதுச்சேரியில் முழு ஊரடங்கு!

Lekha Shree

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint