a

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இன்றிரவு 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

எனினும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு ஆலைகள், 24 மணி நேரமும் செயல்படும் ஆலைகளில் இரவுப் பணிக்கு செல்வோர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதிக் கடிதத்துடன் இரவு நேரங்களில் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அத்தியாவசிய பணிகளான மருத்துவம், பால் விநியோகம், பத்திரிகை ஆகியவற்றிற்கு எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஒரே விமானத்தில் பயணித்த 47 பயணிகளுக்கு கொரோனா..!

ஆனால் இந்த இரவு நேர ஊரடங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமா? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சாதாரணமாகவே இரவு 11 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைந்து விடும்.

அதிகாலை 4 மணிக்கு மேல் தான் பால் விநியோகம், செய்தித் தாள் விநியோகம் உள்ளிட்டவை நடைபெறும். அந்த வகையில் ஊரே அடங்கி தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த இரவு ஊரடங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு கை கொடுக்குமா? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

Also Read  தமிழக முதல்வருக்கு கொரோனா டெஸ்ட்: இது தான் ரிசல்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

சென்னை, மதுரை, கோவையில் வேகமெடுக்கும் கொரோனா பரவல்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமல் ஹாசன்… வைரலாகும் நம்மவரின் ‘நச்’ ட்வீட்…!

Bhuvaneshwari Velmurugan

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

Tamil Mint

பி.எப்., புகார்கள், சந்தேகங்களை வாட்ஸ்அப்பில் கேட்கலாம்: புதிய வசதி!

Tamil Mint

ஓபிஎஸ்..? இபிஎஸ்..? எதிர்க்கட்சி தலைவர் யார்..? அதிமுகவில் தொடரும் இழுபறி

Ramya Tamil

கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை…!

Devaraj

ஓபன் த டாஸ்மாக் மா: சென்னை குடிமகன்களை குஷிப்படுத்த தயாராகும் மதுக்கடைகள்

Tamil Mint

பிப்ரவரி 30-ம் தேதியில் இறந்ததாக இறப்பு சான்றிதழ் வழங்கிய அரசு அதிகாரி! வடிவேலு ரசிகரா இருப்பாரோ?

Lekha Shree

அதிமுக எம்எல்ஏக்களை இழுக்கும் அமமுக? சசிகலாவுக்கு உதவ முயலும் டிடிவி! ஏற்றுக்கொள்வாரா சசிகலா?

Tamil Mint

ஒரே நாடு, ஒரே சமையல் எரிவாயு பதிவு எண்

Tamil Mint