a

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் வைப்பு நிதி – முதல்வர் மு.க.ஸ்டாலின்


கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாயும் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாயும் வைப்பீடு செய்ய செய்யப்படும்.

அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்தத் தொகை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கபடும்.

Also Read  ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிப்பாரா குஷ்பு?

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றிடும்.

கொரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அரசு விடுதிகளில் இல்லாது உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் உதவித்தொகை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

Also Read  பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள நீண்ட கால விடுமுறை - மனதை ரணமாக்கும் ஏழைத் தாயின் குமுறல்

ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து தற்போது கொரோனா நோய் தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும் ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

Also Read  விருப்பமனு கொடுத்தவர்களிடம் திமுக நேர்காணல்: ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

அனைத்து நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கும் நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வெளியிட கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறை தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரும் பத்தாம் தேதி முதல்வர் கன்னியாகுமரி பயணம்

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – வைரலாகும் மு.க.ஸ்டாலின் வீடியோ

sathya suganthi

ஜெயலலிதா வருமான வரி பாக்கி எவ்வளவு: நீதிமன்றம் கேள்வி

Tamil Mint

சென்னை புறநகர் ரயில்கள் இரவில் இயங்காது

Jaya Thilagan

சென்னையில் 50 சதவீத மக்கள் முக கவசம் அணிவது இல்லை: மாநகராட்சி ஆணையர் வேதனை

Tamil Mint

சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் 16ம்தேதி சென்னையில் நடக்க இருந்த சமக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது

Tamil Mint

சட்டமன்ற கூட்டத்தில் இருந்து தி.மு.க. வெளிநடப்பு

Tamil Mint

தமிழகம்: மயிலாடுதுறை தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உருவாகவுள்ளது

Tamil Mint

மக்களையும் காக்கவில்லை.. நதிகளையும் காக்கவில்லை.. மோடியை கடுமையாக விமர்சித்த கமல்..

Ramya Tamil

எஸ்பிபி காலமானார்

Tamil Mint

ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: ‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

Tamil Mint

ஆளுங்கட்சி அமைச்சர்கள் மீது ஊழல் புகார்: நடவடிக்கை எடுக்க தமிழக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு!

Tamil Mint