a

கொரோனா தீவிரமாக இருக்கும் சமயம் அசைவ உணவுகளை சாப்பிடலாமா?


கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். தடுப்பூசி தட்டுப்பாடும் வாட்டி வதைப்பதால், உணவுகளின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை பெற முயற்சித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் தான் எந்த உணவுகளை சாப்பிடுவது, அசைவ உணவுகள் ஆபத்தா போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த சந்தேகங்களுக்கான பதில்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வைரஸ் பாதிப்பு பரவும் சமயம் அசைவ உணவு எடுத்துக்கொள்வது ஆபத்தானது என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், அசைவ உணவுகள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சிக்கன், முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை கொரோனா காலத்தில் எடுத்துக்கொள்வது உடலுக்கு வலு சேர்க்கும்.

Also Read  பல்ஸ் ஆக்ஸி மீட்டரை பயன்படுத்தும் முறை...! முழு விவரம் இதோ...!

ஆனால் அசைவ உணவுப் பொருள்களை வாங்கும்போதும், சமைக்கும்போது சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது அவசியம். சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை வாங்கும்போது அவை கெட்டுப்போகாமல் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.

சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து விற்பனை செய்யப்படும் இடங்களில் மட்டுமே அசைவ உணவுகளை வாங்குவது சிறந்தது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் Frozen அசைவ உணவுகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

Also Read  வங்கிகள் செயல்படும் நேரம் குறைப்பு…! என்னென்ன சேவைகள் ரத்து…!

அதே நேரம் கடைகளில் வாங்கி வரும் சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றை பல நாட்கள் பிரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவதும் உடலுக்கு தீங்காக அமைந்துவிடும். குறிப்பாக சமைத்த அசைவ உணவுகளை அடுத்த நாள் எடுத்து வைத்து சாப்பிடுவது பல பாதுப்புகளை உண்டாக்கும்.

முட்டையை நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும். பச்சை முட்டையை சாப்பிடுவதை தவிர்த்து விடலாம்.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு

சிக்கன், மட்டன், மீன் போன்றவற்றைக் கடையிலிருந்து வாங்கிவந்த பிறகு மஞ்சள், உப்பு கலந்த தூய்மையான நீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய சமைக்க வேண்டும்.

மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுப் பொருள்களும் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதில் முக்கியமானவை. இவற்றையும் நன்றாகச் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேர்க்குரு பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இதோ…!

Lekha Shree

சம்மர் ஃபுரூட் தர்பூசணியால் கிடைக்கும் 5 நன்மைகள்…!

Lekha Shree

இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா…..

Devaraj

கண்ணின் கருவளையத்தை விரட்ட எளிதான வழிமுறைகள்…!

Lekha Shree

கோடை காலத்தில் சருமத்தை பாதுகாக்கும் பேஸ்பேக்குகள்…!

Lekha Shree

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. லாக்டவுன் 2.O? அச்சத்தில் மக்கள்…!

HariHara Suthan

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

தொட்டாற்சுருங்கி இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா?

Lekha Shree

குடல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் உணவு வகைகள்…!

Lekha Shree

வெயிட் லாஸ் பண்ண உதவும் தேங்காய் எண்ணெய்! இப்படி பயன்படுத்துங்கள்!

Lekha Shree

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..

Ramya Tamil