கொரோனா பரவல் அதிகரிப்பு – தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையிலும் பரவிவரும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் மக்கள் நலன் கருதியும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் பொது மக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலும் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு பின்வரும் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும்.

Also Read  தமிழகம்: வெகுவாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!

ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  முழு ஊரடங்கு : மாவட்ட ஆட்சியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மேலும், ஜனவரி 31-ம் தேதி வரை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பட்டுள்ளது.

ஆனால், கல்விதொலைக்காட்சி மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Also Read  ஆன்லைன் கேம் 'Free Fire'க்கு தடை விதிக்கப்படுமா?

பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம்போல் நேரடி வகுப்புகள் தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாமகால் கவிஞர் மாளிகையில் அனைத்து துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து துறைகளின் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

அஸிஸ்ட்டண்ட் கமிஷ்னரை போல் போலியாக வலம் வந்த நபர்… போலீசிடம் சிக்கியது எப்படி?

Lekha Shree

ஹரி நாடார் சென்னையில் கைது

Tamil Mint

கோடநாடு வழக்கு: மேல் விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி..!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது – அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

பயனாளர்களின் சாதியை குறிப்பிட்டு டோக்கன் விநியோகம்; தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் சர்ச்சை!

Tamil Mint

டெல்டா பிளஸ் வைரஸ் 3வது அலையின் முன்னோட்டமா? – தமிழகத்தில் 9 பேர் பாதிப்பு!

Lekha Shree

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் தனிமையில் உள்ளதாக ட்வீட்..!

Lekha Shree

நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.. கனிமொழி பேட்டி..

Ramya Tamil

அதிமுக-திமுக: கட்சி தாங்க வேற…! ஆன தேர்தல் அறிக்கை ஒன்னுதான்…! – நெட்டிசன்கள் கலாய்…!

Devaraj

குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Lekha Shree

மழை எச்சரிக்கை: கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

Tamil Mint