a

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் 14 நாட்கள் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கலாம் – மத்திய அரசு


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

முதல்முறையாக இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 73 லட்சத்து 13 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

1,கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும்.

2.குறிப்பிட்ட பகுதியில் ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் பரவல் 10 சதவீதத்தை தாண்டினாலோ அல்லது ஆக்சிஜன் படுக்கை வசதியில் 60 சதவீதம் நிரம்பினாலோ அந்த பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தலாம்.

3.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்த வேண்டும்.

Also Read  கொரோனா சிகிச்சைக்கு தடுப்பு மருந்தால் பயன் இல்லையா?

4.சமூக, அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசாரம், ஆன்மிகம், திருவிழாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது. திருமணத்தில் 50 பேரும், இறுதிச்சடங்கில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

5.பெரிய மால்கள், தியேட்டர்கள், உணவகங்கள், மதுபான பார்கள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், நீச்சல் குளங்கள், ஆன்மிக தலங்களை மூடலாம். இரவுநேர ஊரடங்கை கண்டிப்புடன் அமல்படுத்தலாம்.

6.சுகாதார சேவைகள், போலீஸ், தீயணைப்பு, வங்கி, மின்சாரம், குடிநீர், தூய்மை பணி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. ரெயில், மெட்ரோ ரெயில், பேருந்து, வாடகை கார்களில் 50 சதவீத பயணிகளை அனுமதிக்கலாம்.

7.அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது.

Also Read  ஆக்சிஜன் தட்டுப்பாடு…. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் நிதியுதவி..!

8.உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் 14 நாட்கள் வரை கடும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

9.கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளூர் மொழியில் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கலாம்.

10.கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சேவையாற்ற தன்னார்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டவர்களை பயன்படுத்தலாம்.

11.வீடுவீடாக சென்று கொரோனா கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரையும், அவரது குடும்பத்தினரையும், அவரோடு தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்த வேண்டும்.

Also Read  அயோத்தி: பாபர் மசூதியின் மாதிரி வரைபடம் வெளியீடு

12.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வகையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதிக அளவில் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்க வேண்டும்.

13.கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்துகள், மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும். அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பது குறித்த துண்டுப்பிரசுரத்தை வழங்க வேண்டும். முதியவர்கள், நாள்பட்ட நோயாளிகளை கொரோனா சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

14.அனைத்து மாநில அரசுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

பல லட்சம் கொரோனா தடுப்பூசியை நன்கொடையாக கொடுத்த இந்தியா – அமெரிக்க பாராட்டு !!!

Tamil Mint

இந்தியாவில் வாரிசு அரசியலை பாஜக ஒழித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

Tamil Mint

இடைத்தேர்தல் முடிவுகள்:

Tamil Mint

எடப்பாடியுடன் மோடி இன்று ஆலோசனை

Tamil Mint

கழிவறைக்குள் சிறுத்தை மற்றும் நாயை ஒன்றாக பூட்டிய பெண்; நாய் உயிருடன் மீட்கப்பட்டதா?

Tamil Mint

நீச்சல் குளத்தில் மகனுடன் ஆட்டம் போட்ட ஹர்திக் பாண்டியா! இது வேற லெவல்!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பால் மே 15ம் தேதி வரை முழு ஊரடங்கு!

Lekha Shree

காங்கிரஸ் காரிய கமிட்டி ஏப்.17ல் ஆலோசனை

Devaraj

வீடுகளுக்கே தேடி வரும் ரேஷன் பொருட்கள் – மார்ச் முதல் அமல்!

Lekha Shree

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

நீட் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடு

Tamil Mint