தொற்று பரவல் அதிகரிப்பு…புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு!


அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் ஜனவரி 10ம் தேதி வரை தளர்வுகளுடனான ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், “அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படும்.

Also Read  திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “உணவகங்கள், விடுதிகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுவர். பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். அது போல் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.

Also Read  "நயினார் நாகேந்திரன் பேசியதற்கு இபிஎஸ்ஸிடம் வருத்தம் தெரிவித்தேன்" - அண்ணாமலை

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை பொறுத்த அளவில், அனைத்து பள்ளிகளிலும், 1 முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை. அதேபோல் அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் ஒத்திவைப்பு” என்று தமிழக ஆசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” – கமல்ஹாசன் காட்டம்!

Lekha Shree

“ஜெய் பீம் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்..!

Lekha Shree

தொகுதி பங்கீடு மல்லுக்கட்டு – தேமுதிக கேட்கும் 23 இடங்களுக்கு தலையசைக்குமா அதிமுக…!

Jaya Thilagan

சென்னையில் இன்று தோனிக்கு பாராட்டு விழா…!

Lekha Shree

மது போதையில் ரகளை செய்யும் குடிமகன்களுக்கு எச்சரிக்கை….. பாதிக்கப்பட்ட மனைவி ஆவேசம்…

Devaraj

திரையரங்குகள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகள்

Tamil Mint

மறைந்த தந்தையின் சிலையை வடிவமைத்து தங்கைக்கு திருமண பரிசு கொடுத்த சகோதரிகள்! – நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது.!

suma lekha

திண்டுக்கல் லியோனி… ஆ.ராசா… தயாநிதி மாறன்..! இவர்கள் பேசியது என்ன?

Lekha Shree

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் – திமுக தலைவர் அறிவுறுத்தல்..!

suma lekha

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..! தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

கும்பகோணம் அருகே ஆலங்கட்டி மழை – உற்சாகமடைந்த மக்கள்…!

sathya suganthi