a

கொரோனாவை பரப்பியது சீனாதான் – அதிரவைக்கும் ஆதாரத்தை வெளியிட்ட அமெரிக்கா…!


கடந்த 2019 ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா என்ற வைரஸ் உலகையே புரட்டி போட்டுள்ளது. 2வது அலை, 3வது அலை என்று இதன் பாதிப்பு முடிவின்றி நீண்டுக்கொண்டே செல்கிறது.

இந்த ஆட்கொல்லி வைரஸ் முதன்முறையாக சீனாவின் ஊகான் நகரில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்ற போதிலும், கொரோனா வைரசை தாங்கள் உற்பத்தி செய்யவில்லை என்று சீனா மறுத்து வருகிறது.

Also Read  ஐபிஎல் போட்டிக்கும் ஆப்பு வைத்த கொரோனா! ட்ரெண்டாகும் Cancel IPL ஹேஷ்டேக்!

ஆனால் அந்நாட்டின் ஈரமான இறைச்சி சந்தையின் வழியே கொரோனா பரவியது என பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. கொரோனா வைரசை ராணுவ ஆய்வகத்தில் உருவாக்கி சீனா திட்டமிட்டு பரப்பியதாக தொடக்கத்தில் இருந்தே அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.

இதையடுத்து கொரோனா வைரசின் தோற்றம் குறித்து, உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஓரிரு நாட்களில் விசாரணை நடத்தவுள்ளது.

Also Read  செயற்கை கருவூட்டல் மூலம் பிறந்த சிம்பாவிற்கு குவியும் வரவேற்பு! வைரலாகும் சிங்கக்குட்டியின் வீடியோக்கள்!

இந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறை புதிய ஆவணங்கள் சிக்கியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சீனாவில் கொரோனா தொற்று வெளிப்படுத்துவதற்கு சில மாதங்களுக்கு முன், சீனாவின் வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி ஆய்வகத்தில் பணியாற்றும் மூன்று ஆராய்ச்சியாளர்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஆய்வாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நேரம் மற்றும் அவர்களின் மருத்துவமனை வருகைகள் பற்றிய புதிய விவரங்களும் இடம்பெற்றிருப்பதால், வூஹான் ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் வெளியேறி இருக்கும் என்பதற்கான வலுவான ஆதாரம் இது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Also Read  கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்த அறிக்கை கொரோனா வைரசின் தோற்றம் குறித்த உலக சுகாதார அமைப்பின் விசாரணையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புத்தரைப் போல அமர்ந்துள்ள ட்ரம்ப் – சீனாவில் விற்பனையாகும் அசத்தலான சிலை!

Shanmugapriya

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுமா? பதிலளித்துள்ள அமெரிக்கா!

Tamil Mint

வட கொரியாவில் டார்ன் ஜீன்ஸ் அணிய தடை!

Shanmugapriya

தமிழ் புத்தாண்டு வாழ்த்தை இவர் சொல்ல கேட்பதில் தனி கெத்துதான்…! புல்லரித்துப் போன தமிழர்கள்…!

Devaraj

தொடர் ஏவுகணை தாக்குதல்.. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் மூளும் அபாயம்…

Ramya Tamil

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கிவிழுந்த டென்மார்க் வீரர்…!

sathya suganthi

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் – நடந்தது என்ன?

Lekha Shree

2 சகோதரிகளின் ஆசையை நிறைவேற்றிய துபாய் போலீசார்…!

Devaraj

மாரடைப்பு ஏற்பட்டு மயங்கிய எஜமானரை செல்போன் அருகே இழுத்துவந்து அவசர எண்ணுக்கு அழைக்க உதவிய நாய்!

Tamil Mint

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நடுரோட்டில் வைத்து ஒருவரை சரமாரியாக தாக்கிய போக்குவரத்து காவலர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya