தமிழகம்: 18 மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 71 ஆயிரத்து 690 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,218 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று  36 மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அரியலூரில் மட்டும் புதிய பாதிப்பு ஏதும் இல்லை. 

இன்று பாதிக்கப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 345 பேரும், கோவையில் 120 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரில் தலா 72 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இருவரும், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

Also Read  தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 மாவட்டங்களில் புதிதாக உயிரிழப்பு இல்லை. 

இதுவரையில் 11 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1,296 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 359 பேரும், கோவையில் 104 பேரும், செங்கல்பட்டில் 85 பேரும் அடங்குவர். 

Also Read  இணைபிரியாத பாசம்: கணவர் கொரோனாவால் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட மனைவி!

இதுவரையில் தமிழகத்தில் 7 லட்சத்து 75 ஆயிரத்து 602 பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 10 ஆயிரத்து 208 பேர் உள்ளனர். 

தமிழகத்தில்  அரியலூர், தருமபுரி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  பாலியல் வழக்கு - PSBB பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனின் ஜாமின் மனு தள்ளுபடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுய இன்பம், திருமணம் எக்சட்ரா… மனம் திறக்கும் ஓவியா

Tamil Mint

மு.க.ஸ்டாலின் உடல் நலம் என்ன ஆனது ?

Tamil Mint

கமலா ஹாரிஸின் சொந்த ஊரான துலசேந்திரபுரத்தில் அவர் வெற்றிக்காக மக்கள் பிரார்தனை

Tamil Mint

சட்டமன்றத்தில் திமுகவுக்கு எதிராக புயலைக் கிளப்பப் போகும் கு க செல்வம்?

Tamil Mint

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறப்பு:

Tamil Mint

அதிமுக 49-வது ஆண்டு தொடக்க விழா: முதல்வர் கொடியேற்றினார்

Tamil Mint

தூது செல்ல நான் தயார்.! உங்க மாமா அனுமதிப்பாரா.? தயாநிதி மாறனை கலாய்த்த அண்ணாமலை.

mani maran

சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

Tamil Mint

நாளை நாடு முழுவதும் மீலாதுன் நபி திருநாள் கொண்டாட்டம்

Tamil Mint

மருத்துவக் கல்வி: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

Tamil Mint

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாரா மீரா மிதுன்.? : மருத்துவர் முன்னிலையில் வாக்குமூலம் பெற திட்டம்.!

mani maran