a

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?


கொரோனா தொற்று காலத்தில் தொற்று பாதிப்பை விட அதைப் பற்றி வரும் வதந்திகள் தான் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் தடுப்பூசி கிடைக்காதா என ஏங்கிய மக்கள், தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்ட பின் வெறும் வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி அதனை போட மறுத்து வருகின்றனர்.

இதில் தடுப்பூசி போட்டால், இரண்டு ஆண்டுகளில் உயிரிழப்பு ஏற்படும் என
நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மான்டாக்னியர் (Luc Montagnier) தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகி மக்களை கதிகலங்க செய்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி இப்படி கூறினாரா? இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்கு இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் பல்வேறு நாடுகள் அவசரகால பயன்பாட்டுக்காக தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

Also Read  தசராவுக்கு வெளியாகும் 'கேஜிஎப்' படத்தின் 2ம் பாகம்?

இந்தியாவிலும் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

தடுப்பூசி போடுவது மட்டுமே கொரோனா வெல்லும் ஒரே வழி என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டால் மாரடைப்பு வரும், ரத்தம் உறைதல் பிரச்சனை வரும் என பல வதந்திகள் உலா வரும் நிலையில், புதிதாக தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் இறந்துவிடுவார்கள் என்று நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மான்டாக்னியர் சொன்னது போல ஒரு செய்தி வதந்தி தீயாய் வாட்ஸ் அப் குழுக்களில் பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் தான் இந்த லூக் மான்டாக்னியர்.

Also Read  “நந்திக்குள் கோடி ரூபாய் வைரம்” – ஐடியா கொடுத்தவனுக்கே ஆப்பு வைத்த கில்லாடி…!

இவர் எப்போதுமே சர்ச்சையாக பேசி சிக்கிக்கொள்வார். கொரோனா பரவிய தொடக்கத்தில், இந்த வைரஸ் சீன வைரஸ் ஆய்வகத்தால் வடிவமைக்கப்பட்டது என்று கூறி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பினார்.

ஹோமியோபதி மருந்துகள் மீது ஈர்ப்பு கொண்டவரான இவர், தடுப்பூசிக்கு எதிரான தனது மனநிலையை பல இடங்களில் தெரிவித்து வருகிறார்.

அதுபோல தான் பெருந்தொற்றின்போது தடுப்பூசி போடுவதை நினைத்தே பார்க்கக் கூடாது.

அது தொற்று வலுவடைய உதவுவதுடன், புதிய வைரஸ் வேரியன்ட்டுகள் உருவாகவும் காரணமாகும் என்று அவர் சமீபத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

Also Read  இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக உயர்வு..!

இதைத் தான் பலரும் திரித்து தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவார்கள் என அவர் கூறியதாக கதைக் கட்டி பரப்பி வருகின்றனர்.

அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இறந்துவிடுவார்கள் என எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பத்திரிகை தகவல் பணியகம் “வாட்ஸ் அப்பில் பரவும் அந்தச் செய்தி உண்மை இல்லை. அது முற்றிலும் போலியான செய்தி.

கொரோனா தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை. எனவே, இந்தச் செய்தியை யாருக்கும் பகிர வேண்டாம்” என்று கூறியுள்ளது.

கொரோனா காலத்தில் நமக்கு எந்த சந்தேகம் வந்தாலும் அதை மருத்துவர்களிடமே தொடர்பு கொண்டு தெளிவு பெற வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வாட்சப்பில் புது வசதி

Tamil Mint

மு.க.ஸ்டாலினை கொண்டாடும் கேரளா ஊடகங்கள்…!

sathya suganthi

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

புலிகளுக்கு மத்தியில் நச் குளியல்…! சிங்கங்களுடன் கூலாக ஒரு டின்னர்…! கலக்கும் சஃபாரி ஸ்டைல் ஹோட்டல்..!

Devaraj

‘வைரக் கற்கள்’ – வதந்தியை நம்பி ஏமாந்த மக்கள்…!

Lekha Shree

செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள்…! சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்…!

sathya suganthi

“தரமான முக கவசத்தை அணியுங்கள் ” – கொரோனா மூன்றாம் அலையை தடுக்க மருத்துவர்கள் யோசனை

Shanmugapriya

கவுதம் கம்பீரின் தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை! – நடந்தது என்ன?

Lekha Shree

சூரிய நமஸ்காரம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன?

Lekha Shree

“நூறாண்டுகள் கண்டிராத ஒரு பெருந்தொற்று கொரோனா” – பிரதமர் மோடி

Lekha Shree

பிரணாப் முகர்ஜி கவலைக்கிடம், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

Tamil Mint

வெளிநாட்டில் தான் திருமணம் நடந்தது…! விவகாரத்து தேவையில்லை…! சர்ச்சையில் சிக்கிய பெண் எம்.பி.

sathya suganthi