விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்! எங்கு தெரியுமா?


கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் புலிகள், கரடிகள் மற்றும் பெரட்டுகள் ஆகியவற்றுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த வாரம் ஓக்லாண்ட் உயிரியல் பூங்காவில் ஜிஞ்சர் மற்றும் மொலி என்று அழைக்கப்படும் இரண்டு புலிகளுக்கு முதன் முறையாக தடுப்பூசி போடப்பட்டதாக சான் பிரான்சிஸ்கோ குரோனிக்கிள் என்ற பத்திரிகை தெரிவித்தது.

விலங்குகளுக்கான தடுப்பூசியை நியூஜெர்சியில் உள்ள கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜோயிடிஸ் நன்கொடையாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உயிரியல் பூங்காவில் பணிபுரியும் கால்நடைகளின் துணைத் தலைவர் அலெக்ஸ் ஹெர்மன், “பூங்காவில் உள்ள எந்த விலங்குக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அவற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறோம். எனவே அவற்றிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.

Also Read  லாட்டரியில் கோடிக்கணக்கில் பணம் கிடைத்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்!

முதன்முதலில் பூங்காவில் உள்ள புலிகள், கருப்பு மற்றும் grizzly கரடிகள், மலை சிங்கங்கள் மற்றும் பெரட்டுகள் ஆகியவற்றுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டன.

அதற்கு அடுத்ததாக பன்றிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இது தொடர்பாக பூங்கா நிறுவனம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில், “மிருகக்காட்சிசாலை ஆனது சமூக விலகலை பராமரிக்க சில தடுப்புகளை பயன்படுத்தி வருகிரியாது. பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களை பாதுகாக்க ஊழியர்கள் பாதுகாப்பு கியர் அணிந்து உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பால் 5 நாள் முழு பொதுமுடக்கம் அறிவிப்பு…!

ஏறக்குறைய 70 உயிரியல் பூங்காவில் வாழும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கும் 27 மாநிலங்களில் அமைந்துள்ள ஒரு டசன் கன்சர்வேடரிகள், சரணாலயங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கும் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை ஜோயிடிஸ் நிறுவனம் நன்கொடையாக அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இது என்ன புதுசா இருக்கு! – செல்போனில் ஸ்கேன் செய்து கொரோனா தொற்றை கண்டறியும் நவீனம்!

Shanmugapriya

குறையும் ஆல்பா; அதிகரிக்கும் டெல்டா: பீதியில் அமெரிக்கா…!

sathya suganthi

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!

sathya suganthi

விண்ணில் பிரத்யேக ஆய்வு மையம் அமைக்கும் சீனா…!

Lekha Shree

இனி வீட்டிற்கே வந்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஜோ பைடன் முடிவு!

suma lekha

கொரோனா இறப்புகளை தடுப்பதில் ரெம்டெசிவர் மருந்து தோல்வி: உலக சுகாதார அமைப்பு.

Tamil Mint

‘உலகமே ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது’ – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

suma lekha

வீட்டில் கருஞ்சிறுத்தை வளர்க்கும் தம்பதி! – வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – உலகின் முதல் நாடாக ரஷ்யா சாதனை…!

Devaraj

10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றுக்கு உள்ளான முதியவர்!

Shanmugapriya