கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போடலாமா? வழிகாட்டுதல் நெறிமுறை வெளியீடு…!


நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்கும் வகையில் அரசு விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம், கர்ப்பிணியர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியரில், 90 சதவீதம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் தொற்றில் இருந்து மீள்கின்றனர் என்றும் இவர்களில் சிலருக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதுடன், கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Also Read  350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

இந்த பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க கர்ப்பிணியர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ள மத்திய அரசு, கர்ப்பத்தால் தொற்று அதிகரிக்கும் என கருத வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

அறிகுறிகளுடன் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணியர், பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், மற்றவர்கள் போல் மருத்துவமனையில் சேருவது அவசியம் என்றும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணியருக்கு, கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளது.

Also Read  பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான 95 சதவீதம் கர்ப்பிணியருக்கு, குழந்தை எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாக பிறந்துள்ளது என்றும் சிலருக்கு முழு வளர்ச்சி அடையாத சிசு அல்லது, 2.5 கிலோவுக்கு குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறந்துள்ளன என்றும் விளக்கம் அளித்துள்ளது.

சிலரது குழந்தைகள் பிறப்புக்கு முன் இறந்து உள்ளதால் கொரோனா பாதிப்பிற்கு உள்ளான கர்ப்பிணியர், பிரசவத்திற்கு பின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

Also Read  செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் "டெல்டா"…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

தடுப்பூசி, நோய் பாதிப்பில் இருந்து பிறரை போலவே, கர்ப்பிணியரையும் முழுமையாக பாதுகாக்கிறது என்றும் எனவே கொரோனா தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், கர்ப்பிணியருக்கு தடுப்பூசி குறித்த விளக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

121 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீராங்கனை!

Lekha Shree

“வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மோசமாகும்!” – மத்திய அரசு

Lekha Shree

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் தேவைகளை பெற ஆன்லைன் சேவைகள் அறிமுகம்!

Lekha Shree

பெங்களூருவில் இருந்து வெளியேறிய ஹிதேஷா… மகாராஷ்டிராவில் தஞ்சம்

Jaya Thilagan

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

ஊரடங்கு மேலும் நீட்டிப்பு.. எப்போது வரை தெரியுமா..?

Ramya Tamil

“அமித் ஷா பதவி விலக வேண்டும்… மோடிக்கு எதிராக விசாரணை வேண்டும்” – ராகுல் காந்தி

Lekha Shree

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வரும் 2021 பிப்ரவரி மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது!!

Tamil Mint

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

Shanmugapriya

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree