a

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் 18+ வயதினருக்கு தற்போது தடுப்பூசி இல்லை…!


நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 3 ஆம் கட்டமாக இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

Also Read  முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

இதன் பொருட்டு கடந்த 3 நாட்களில் 2 கோடியே 45 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டத்துக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசோ, இதை தயாரிக்கும் நிறுவனங்களோ இன்னும் அனுப்பி வைக்கவில்லை என மாநில அரசுகள் கைவிரித்துள்ளன.

முதல் மற்றும் 2ம் கட்டத்தில் முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் 2வது டோஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தடுப்பூசி மையங்களில் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும்
மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டன.

Also Read  அதிரடி ஆஃபர்களுடன் களமிறங்கியுள்ள சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள்!!!

எப்போது இத்திட்டம் தொடங்கப்படும் என்ற தேதி பின்னர் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளன. குஜராத்தில் மட்டும் 10 மாவட்டங்களில் இவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி போடப்பட உள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படியே வேளாண் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது – பிரதமர்

Tamil Mint

20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம்!

Tamil Mint

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

அம்பானி வீட்டு அருகே வெடிப் பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட விவகாரம் – கார் உரிமையாளர் மர்ம மரணம்!

Lekha Shree

இந்தியாவில் 30 கோடி மக்களுக்கு 6 முதல் 7 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Tamil Mint

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ. 1 கோடி நன்கொடை வழங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்!

Tamil Mint

டெல்லி மயானங்களில் இடமில்லை: பூங்காக்களில் தகனமேடைகள் அமைக்கப்படும் அவலநிலை…!

Devaraj

கிரிக்கெட் போட்டியின் போது காதலை வெளிப்படுத்திய ரசிகர்!!

Tamil Mint

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

Tamil Mint

குறை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி – தாய்ப்பால் இன்றி புட்டி பால் குடித்து வளரும் சுட்டி…!

Devaraj