தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய கொரோனா திரிபு…!


கொரோனாவின் மற்றொரு திரிபு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை வந்த திரிபுகளில் இது மிகவும் ஆபத்தானதாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்தப் புதிய கொரோனா திரிபுக்கு பி.1.1.529 என்ற பெயரில் வழங்கப்படுகிறது. விரைவில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் கிரேக்க குறியீட்டுப் பெயர் ஒன்று வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Also Read  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தொடங்கும் அன்னதானம்!

இந்த திரிபு மிக அதிகமாகவும் வேகமாகவும் பன்மடங்காகப் பெருகும் தன்மையோடு இருப்பதாக இதை கண்டறிந்து ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் தொற்றுநோய் மற்றும் அதன் ஆய்வுக்கான மைய இயக்குனர் தெரிவிக்கையில், “இதுவரை ஏற்பட்ட திரிபுகளில் இது மிகவும் அசாதாரணமானது. மற்ற திரிபுகளில் இருந்து இது நிறைய விஷயங்களில் வேறுபட்டுள்ளது. எங்களை இந்த திரிபு பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.

Also Read  தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு?

இதுவரை வந்த தீர்ப்புகளில் இந்தத் திரிபு புதிய பரிணாமமாக உள்ளது. இன்னும் பல திரிபுகள் அல்லது பிறழ்வுகள் இதிலிருந்து உருவாகும் என எதிர்பார்க்கிறோம்” என கூறியுள்ளார்.

இந்த தொற்றால் தென் ஆப்பிரிக்காவில் 100 பேரும் போட்ஸ்வானவில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஹாங்காங் பகுதியில் சுற்றுலா பயணிகள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் பகுதியில் இருந்து இந்தியா வரும் சர்வதேச பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த திரிபு மிக தீவிர பொது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியதாக பார்க்கப்படுகிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

மேலும், இந்த திரிபு நினைப்பதை போல் ஆபத்தாக இருக்கும் பட்சத்தில் இது கொரோனா 4-ம் அலைக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு குட்நியூஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..

Ramya Tamil

இரயில்வே துறை தனியார்மயமாகுமா….? அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்….

VIGNESH PERUMAL

முற்றுப்புள்ளி இன்றி தொடரும் கள்ளச்சாராய பலிகள் – மத்திய பிரதேசத்தில் 4 பேர் உயிரிழப்பு

Tamil Mint

“மக்கள் கொரோனாவில் இருந்து மீள வேண்டும்” – கர்ப்ப காலத்திலும் நோன்பு வைக்கும் செவிலியர்!

Shanmugapriya

“அமேசானின் திட்டம் மத மாற்றம்!” – ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையில் வெளியான சர்ச்சை கட்டுரை..!

Lekha Shree

சைலஜா டீச்சருக்கு அரசு கொறடா பதவி…! நியூஸ் ரீடராக இருந்தவருக்கு சுகாதாரத்துறை…!

sathya suganthi

ராஜஸ்தான் : தாயத்து செய்ய புலி மீசையை வெட்டிய வனத்துறை அதிகாரிகள்!

Lekha Shree

விண்வெளிக்கு சென்ற 4 பேர்..பத்திரமாக பூமிக்கு திரும்பினர்..!

suma lekha

“இந்திய கொரோனா திரிபு சர்வதேச அளவில் கவலைக்குரியது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

நாயை சித்திரவதை செய்து அதன் காலை உடைத்த இளம் பெண்! – காரணம் என்ன தெரியுமா?

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree