“மறுபடியும் முதல்ல இருந்தா?” – மீண்டும் வூஹானில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!


உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனா என்னும் கொடிய தொற்று முதன்முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் கண்டறியப்பட்டது. அதையடுத்து உலகநாடுகள் பலவற்றிற்கு பரவி மக்கள் கொத்து கொத்தாக மாண்டதை யாராலும் மறந்திருக்க முடியாது.

சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த கொடிய தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. அதுமட்டுமல்லாது பலர் தங்களின் சொந்தங்களை இழந்து வாடி வருவதற்கு இந்த தொற்று முக்கிய காரணம்.

Also Read  மம்மிக்குள் என்ன இருக்கும்? சிடி ஸ்கேன் எடுத்த மருத்துவர்கள்…!

ஆனால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அதை ஆர்வத்துடன் செலுத்திவந்ததை அடுத்து தற்போது பல நாடுகளிலும் இந்த தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

இதனால், தற்போது அம்மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மாகாணத்தில் சுமார் 1.1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர்.

சீனாவில் உள்ள 15 மாகாணங்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பரிசோதனை செய்வது மற்றும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு இறங்கியுள்ளது.

Also Read  "இந்தியாவிற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும்" - கமலா ஹாரிஸ்

தற்போதைய கொரோனா பரவல் சீன தலைநகர் பெய்ஜிங் வரை சென்றடைந்துள்ளது. உள்நாட்டில் இருப்பவர்கள் மூலம் தான் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் சீனாவில் 90 பேருக்கு கூர்நா தொற்று உறுதிசெய்யப்ட்டுள்ளது. இதில் 51 பேருக்கு உள்நாட்டவர்களாலேயே தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

Lekha Shree

பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.!

suma lekha

“டிரம்பின் பொய் பிரச்சாரங்களால் மக்களின் வரிப்பணம் ரூ. 380 கோடி வீண்” – வாஷிங்டன் போஸ்ட்

Tamil Mint

முகக்கவசம் அணியாமல் சர்ச்சையில் சிக்கிய அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன்

Tamil Mint

அமெரிக்காவில் 2-ம் உலகப் போர் பலி எண்ணிக்கையை கடந்தது கொரோனா உயிரிழப்பு

Jaya Thilagan

ஃபேஸ்புக் நிறுவனம் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் வழக்கு!

Tamil Mint

ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி நிறுத்தம்! – உலக வங்கி அறிவிப்பு..!

Lekha Shree

விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

sathya suganthi

வேலைக்கு சென்ற பெண் பத்திரிக்கையாளர்…. வீட்டுக்கு திருப்பி அனுப்பிய தலிபான்கள்…!

suma lekha

திடீரென கருப்பு நிறத்தில் மாறிய அன்னப் பறவை! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு விரைவில் டும் டும் டும்!

Shanmugapriya

வரலாறு காணாத வெப்பம்… ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!

Lekha Shree