மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா?


கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அதிகரித்துள்ளது. நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியது.

உயிரிழப்புகளும் பாதிப்புகளும் அதிகரித்து வந்தன. ஏப்ரல்-மே மாதங்களில் உச்சத்துக்கு சென்ற கொரோனா பரவல் ஜூன் மாதங்களில் படிப்படியாக குறையத் தொடங்கியது.

அதே நேரத்தில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.

கேரளா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

Also Read  கொரோனா விதிமுறை மீறல் - நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

இதுகுறித்து மத்திய சுகாதார இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்த குழு கண்காணிக்கும். மருத்துவமனைகளில் படுக்கை இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்சிஜன் இருப்பு குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read  மேலும் குறையப் போகும் வங்கிகளின் எண்ணிக்கை: அதிர்ச்சியில் ஊழியர்கள்

மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்த குழுவினர் வழங்கி வருகின்றனர்.

இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை செய்து வருகிறார். இந்த மாநிலங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Also Read  தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்… ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.500!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

8 எம்பிக்கள் அதிரடி சஸ்பெண்ட்

Tamil Mint

ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவருக்கு கொரோனா – தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் நோய் பாதிப்பு…!

Devaraj

இன்று 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு – முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை…!

Devaraj

ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!

Tamil Mint

அரசுப் பள்ளியில் 9-12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு லேப்-டாப்…! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!

sathya suganthi

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் புயல் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் – அமித்ஷா

Tamil Mint

கேரள சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்! – தமிழில் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட எம்.எல்.ஏ!

Lekha Shree

“ஆக்சிஜனுக்காக பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறோம்” – பரிதவிக்கும் டெல்லி மருத்துவமனை

Shanmugapriya

இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது – ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

Lekha Shree

ஊரடங்கு காலத்தில் நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூ.60 லட்சம் ஒதுக்கிய ஒடிசா அரசு!

Shanmugapriya