கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல – மத்திய அரசு


இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட 

பிறகுதான், அது அறிமுகம் செய்யப்படும்.

விரைவில் ஒரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். மற்ற நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிபோல், நமது தடுப்பூசியும் பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல. விருப்பப்பட்டால் மட்டும் போட்டுக்கொள்ளலாம். இருப்பினும், கொரோனாவுக்கு எதிராக தன்னையும், தன் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் இதை போட்டுக்கொள்வது நல்லது. ஏற்கனவே கொரோனா வந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். புற்றுநோய், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய் இருப்பவர்களும் போட்டுக்கொள்ளலாம். அவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கிறது.

Also Read  கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

ஒரு டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2–வது டோஸ் போடப்பட வேண்டும். இப்படி முழுமையாக போடப்பட்டால்தான் பலன் கிடைக்கும். 2–வது டோஸ் போட்ட 2 வாரங்கள் கழித்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.

கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு சிலருக்கு லேசான காய்ச்சல், தடுப்பூசி போட்ட இடத்தில் வலி உள்ளிட்ட பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

Also Read  துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்: பதக்கங்களை குவிக்கும் இந்தியா.!

பொதுமக்கள் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு, அங்கேயே அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது நல்லது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் ஆகும். ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.

அதன்பிறகு அந்த பயனாளிக்கு எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற தகவல், செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 2 டோஸ் போடப்பட்ட பிறகு, ‘கியூஆர் கோடு’ அடிப்படையிலான சான்றிதழ், செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Also Read  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதை தாண்டியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிதீவிர புயலாக உருவெடுக்கும் ‘யாஸ்’…!

Lekha Shree

பாஜகவில் இணையும் கங்குலி? விரைவில் அறிவிப்பு!

Jaya Thilagan

செல்லுக்கு செல் தாவும்…! மூளையை தாக்கும் “டெல்டா”…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை

Tamil Mint

வாட்ஸ் அப்-ல் நம்பர் சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது? இதோ சூப்பர் டெக்னிக்…!

sathya suganthi

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

Tamil Mint

பெற்ற தாயின் உயிரை காக்க உதவிய 2 வயது பெண் குழந்தை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பஞ்சாப்பின் புதிய முதல்வராக இன்று பதவியேற்கிறார் சரண்ஜித் சிங் சன்னி..!

suma lekha

தந்தையை மதுபோதைக்கு உள்ளாக்கி தீ வைத்து எரித்த பெண்! – அதிர்ச்சி சம்பவம்!

Shanmugapriya

பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…!

Lekha Shree

“கோழிக்கு வயிற்றுப்போக்கு” – இவ்விடங்களில் வெளியே வந்த கர்நாடக நபர் சொன்ன காரணம்

Shanmugapriya