குறிவைக்கப்பட்ட 5 முன்னாள் அமைச்சர்கள்! டிஜிபி கந்தசாமிக்கு திமுக கொடுத்த அசைன்மெண்ட்!


ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்தவுடன் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் தொடர்ந்து ஆதாரங்களுடன் பேசி வந்தார்.

இப்போது அவர் தலைமையில் அரசும் அமைந்து விட்டது. கொரோனா தீவிரம் காரணமாக வேறெந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்த மு.க.ஸ்டாலின் இப்போதும் ஆக்‌ஷனில் இறங்கியுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை டிஜிபி கந்தசாமியை சந்தித்து பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த சந்திப்பு தான் இப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு பயத்தை அளித்துள்ளது. அண்மையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமியை நியமித்தார் ஸ்டாலின்.

Also Read  ஸ்டார் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் கோகுல இந்திரா?

இவர் சிபிஐ அதிகாரியாக இருந்தபோது குஜராத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையே கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாதன் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதால், அது முடிந்ததும் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் பூகம்பம் போல வெடிக்கும் என்று சில திமுக நிர்வாகிகள் சொல்கின்றனர்.

எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக தமிழக ஆளுநரை இரண்டு முறை நேரில் சந்தித்து அப்போதைய அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் பெரிதாய் எடுக்கப்படவில்லை.

அதன்பிறகு தேர்தலில் வெற்றி பெற்றால் இவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லி இருந்தார் ஸ்டாலின். 1996-ம் திமுக ஆட்சிக்கு வந்ததும் அதற்கு முந்தைய ஆட்சியில் அதிமுக செய்த ஊழல்களை பட்டியலிட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தனர்.

Also Read  பாலியல் தொழிலாளிகளுக்கு நல்ல திட்டங்கள்: தமிழக அரசு முடிவு

அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா சிறை தண்டனையை சில நாட்கள் அனுபவித்தார். அந்த வழக்கால் தான் சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை பெற்றார்.

இதனால் தான் மு.க.ஸ்டாலின் ஊழல் புகார்களை விசாரிக்க கந்தசாமியை நியமித்ததும் அதிமுக தலைகள் ஆட்டம் கண்டுள்ளன.

Also Read  இரட்டை இலைக்கு கை கொடுக்கும் பாஜக… கைகழுவிய பாமக..! கதறும் அதிமுக!

முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம்,எஸ்.பி. வேலுமணி, தங்கமணி ,விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கந்தசாமி தலைமையிலான குழு இவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகிறார்களாம். இப்போது உள்ள திமுக அமைச்சர்களிடம் அவர்கள் துறையில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்த தகவல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுள்ளது.

இந்த தகவல்கள் முன்னாள் அமைச்சர்களின் காதுகளுக்கு செல்ல, இப்போது அனைவரும் ஆஃப் ஆகி விட்டார்களாம்.

ஊழல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்களா? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை

Devaraj

அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி

Tamil Mint

டெல்லியில் தோனியை சந்தித்த அமைச்சர் துரைமுருகன்…!

Lekha Shree

ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

பாலியல் புகார் – தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்குப்பதிவு!

Lekha Shree

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

வேளாண்துறையை அமைச்சர் கே. பி. அன்பழகனியிடம் கூடுதலாக ஒப்படைப்பு

Tamil Mint

1 முதல் 8 வரை ஆல்பாஸ் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

sathya suganthi

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ‘விடியல் எப்போது ஸ்டாலின்’ ஹேஷ்டேக்…! காரணம் இதுதான்!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை

Tamil Mint

கேரள அமைச்சரவையில் புதுமுகங்கள் – சைலஜா டீச்சர் வரவேற்பு

sathya suganthi

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint