குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்


மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுவதாக கமல்ஹாசன் கூறியுள்ளார். 

அதைத்தொடர்ந்து, கமல்ஹாசன் கூறுகையில், “அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர். பிறப்பு சான்றிதழுக்கு ஆண் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் ரூ. 500, பெண் குழந்தையாக இருந்தால் ரூ. 200 , சாதி சான்றிதழுக்கு தனியாக பெண்ணுக்கு ரூ. 500, ஆணுக்கு 3,000, ஓட்டுநர் உரிமத்திற்கு ஆணுக்கு  ரூ.5,000 பெண்களுக்கு ரூ.1000, கடவுசீட்டுக்கு ரூ.500, குடும்ப அட்டைக்கு ரூ.1000, இடபதிவுக்கு ரூ.10,000,பட்டா பரிவர்த்தனைக்கு ஆணுக்கு ரூ.30,000 பெண்ணுக்கு ரூ.5,000, சொத்துவரிக்கு ரூ.5,000, மின் இணைப்புக்கு 15,000, தண்ணீர் இணைப்பிற்கு ரூ.10,000, பாதாள சாக்கடை இணைப்பிற்கு ரூ.5,000, திட்ட அனுமதி பெற ரூ.5,000 முதல் 30,000 வரை, வாரிசு சான்றிதழ் பெற ரூ.500, பிணவறைக்கு ரூ.2,000  கொடுக்கவேண்டும்” என கூறி கடுமையாக சாடியுள்ளார்.

Also Read  ராமேஸ்வரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற குடும்பத்தோடு பரிகார பூஜை

மேலும் “மக்கள் நீதி மய்யம், தலைமை செயலகமே பேப்பர் இன்றி செயல்படவேண்டும் என்பதே எங்களது ஆசை. மக்களுக்கும் அரசுக்குமான தொடர்பு எளிதாக இருக்கவும் லஞ்சம் தவிர்க்கவும் டிஜிட்டல் முறை உதவும். இதற்காக அரசு மக்களிடத்தில் முதலீடு செய்யும். இது மக்கள் நீதி மய்ய கொள்கை” எனவும் அவர் குறிப்பிட்டார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்…!

Lekha Shree

மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுக வேட்பாளர்கள்…!எதற்கு தெரியுமா…?

Devaraj

லண்டன் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

ஊரடங்கு குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Mint

நீட் தேர்வு – ஏ.கே. ராஜன் குழு கூறுவது என்ன?

Lekha Shree

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் சட்டங்கள் காலி: பிரியங்கா காந்தி

Tamil Mint

எம்எல்ஏ பிரபு திருமண விவகாரத்தில் தீர்ப்பு தள்ளி வைப்பு

Tamil Mint

தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது

Tamil Mint

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்ட சீமான்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“எல்லாரும் என்னை ஏமாத்திட்டீங்க..” ம.நீ.ம. நிர்வாகிகளிடம் கமல் ஆவேசம்

Ramya Tamil

தொழிலதிபரை அடித்து சொத்துக்களை எழுதி வாங்கியதாக போலீஸ் மீது புகார் – சிபிசிஐடி வழக்குப்பதிவு

sathya suganthi

திமுகவின் கலப்புத் திருமணம் குறித்த வாக்குறுதியை திரித்து வீடியோ வெளியிட்ட பெண் மீது நடவடிக்கை!

Lekha Shree