சேவை வரி கட்டாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்த நீதிமன்றம்…!


சேவை வரி செலுத்தாதது தொடர்பாக விளக்கமளிக்க 10 முறை சம்மன் அனுப்பியும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ. 500 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

Also Read  ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா - உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

அதற்கான ஆவணங்கள் சிக்கியதும், உரிமையாளர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் கடந்த 2018 ஆம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Also Read  தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பத்து முறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜராகவில்லை என்றும் இதன் காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி மீனாகுமாரி, சேவை வரித்துறையின் விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராகாதது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுவதாக தெரிவித்து, விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Also Read  'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் சமந்தா நடிக்க இதுதான் காரணமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கிரேக்க மன்னர் தோற்றத்தில் தனுஷ்… வைரலான Common Dp…!

Lekha Shree

5 மொழிகளில் விஷாலின் லத்தி…

suma lekha

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

தனி விமானத்தில் கொச்சினுக்கு பறந்த விக்கி-நயன் ஜோடி! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

“கொளுத்தி போடுறது அபிஷேக்!” – வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் போட்டியாளர்..!

Lekha Shree

பில்லா படத்தில் முதன் முதலில் நயன்தாரா வேடத்தில் நடிக்க இருந்தது இவரா?… கால்ஷீட் பிரச்சனையால் கை நழுவிய வாய்ப்பு

malar

“வாடா தம்பி” – வெளியானது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் பாடல்..!

Lekha Shree

அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

போட்டியாளர்களுக்குள் முற்றிக்கொண்ட மோதல்..! ரணகளமான ‘பிக்பாஸ்’ வீடு..!

Lekha Shree

கொரோனா பாதிப்பு: மீனவ குடும்பங்களுக்கு உதவும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ First Single இன்று வெளியீடு…! நேரம் குறித்த அப்டேட் இதோ..!

Lekha Shree

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

Devaraj