சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்


சென்னையின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்  கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையை இன்று தொடங்கியது. இந்த கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம்  பரிசோதனை வெற்றிகரமாக இருப்பதாக அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

“ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தடுப்பூசியின் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்” என மருத்துவமனை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களிடம் பேசிய புரோ சான்ஸ்லர், டாக்டர் பி சத்தியநாராயணன், “மருத்துவமனை இதுவரை 500 தன்னார்வலர்களை சோதனைக்கு சேர்த்துள்ளதாகவும், ஆட்சேர்ப்பு டிசம்பர் இறுதி வரை நடக்கும்” என கூறினார். 

Also Read  தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு தொடர் தீவிர சிகிச்சை

தொடர்ந்து பேசிய டாக்டர் பி சத்தியநாராயணன், “இது இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். எனவே எங்களால் முடிந்த வரையில் முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.  

“18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கடந்த காலங்களில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படாதவர்கள் தடுப்பூசி பரிசோதனையின் மூன்றாம் கட்டத்தில் தன்னார்வலராக பங்கேற்கலாம்”  என்று டாக்டர் சத்யஜித் மொஹாபத்ரா கூறினார். மேலும் “கர்ப்பிணி பெண்கள் இந்த பரிசோதனைகளில் பங்கேற்கமாட்டார்கள். 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசி இரண்டு முறை செலுத்தப்படும்” எனவும் அவர் தெரிவித்தார். 

Also Read  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கில் தளர்வு? நிபுணர்கள் சொன்ன தகவல்…!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனத்தால் இந்த கோவாக்சின் உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசியை மனித பரிசோதனைக்கு உட்படுத்தலாம்  என இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் தெரிவித்தார். 

தடுப்பூசியின் முதல் இரண்டு கட்டங்களில் பங்குபெற்ற தன்னார்வலர்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி தவிர வேறு எந்தவிதமான மோசமான எதிர்விளைவுகளையும் சந்திக்கவில்லை என்று மருத்துவமனையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Also Read  "உளுத்து போயிருக்கின்றன" - இணையத்தில் வைரலாகும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குறிப்பு…!

ஜூலை 2020 இல் தொடங்கிய முதல் கட்ட பரிசோதனையில் 30 பங்கேற்பாளர்கள் இருந்தனர்.  ஆகஸ்டில் நடைபெற்ற  இரண்டாவது கட்ட பரிசோதனையில், 45 பங்கேற்பாளர்களுக்கு மாதிரிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே தொகுதியில் அதிமுக, பாஜக தனித்தனியே பிரச்சாரம்!

Lekha Shree

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடக்கம்

Tamil Mint

ரஜினி அரசியலுக்கு வருவேன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டிட்டாரு.! கமல்ஹாசன் திடீரென உள்ள நுழைந்து அதிரடி காட்டிட்டு இருக்காரு: இது மக்கள் நீதி மய்யத்தின் வரலாறு

mani maran

இன்றைய தலைப்புச் செய்திகள் | 02.06.2021

sathya suganthi

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!

Lekha Shree

திருநெல்வேலியில் மீண்டும் நயினார் நாகேந்திரன்? விட்டதை பிடிப்பாரா?

Lekha Shree

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும்தரவரிசைப் பட்டியல் வெளியீடு

Tamil Mint

பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Lekha Shree

அமலுக்கு வந்தது அபராதம்: துப்பினால், முக கவசம் அணியாவிட்டால் ஃபைன் கட்ட தயாராகுங்கள்

Tamil Mint