a

கோவாக்சின் தடுப்பூசியால் இந்தியர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல்?


கொரோனா நெருக்கடியின் அவசர கால தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அனுமதி பட்டியலில், கோவாக்சின் தடுப்பூசி மருந்து இதுவரை இடம்பெறவில்லை. இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்தும் அவசர பயன்பாடு பட்டியலில் இடம்பெறவில்லை.

அதேசமயம் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மருந்து இடம்பெற்றுள்ளது. பைசர் பயோன்டெக், அஸ்ட்ராஜெனேகா, ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா, சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி பட்டியலில் உள்ளன.

Also Read  கும்பகோணத்தில் ஒரே பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா…!

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்க அந்நாடுகள் திட்டமிட்டுள்ளன.

அந்தந்த நாடுகளில் உள்ள சுகாதார அமைச்சகங்கள் அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் அனுமதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  திருப்பதியில் வைகுண்ட ஏகாதசிக்கு உள்ளூர் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

இந்நிலையில், முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்காதால், அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், கோவாக்சின் மருந்தை உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Also Read  இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

இதற்காக பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் கோவாக்சின் மருந்தின் செயல்திறன் குறித்த விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பு, கூடுதல் தகவல்களை கேட்டுள்ளது.


இதையடுத்து தடுப்பூசி குறித்த கூடுதல் ஆவணங்களை பாரத் பயோடெக் சமர்ப்பிக்க உள்ளது. அதை உலக சுகாதார அமைப்பு மதிப்பீடு செய்து தனது முடிவை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

2 கோடி ரூபாய் வரை சிறிய அளவிலான வங்கி கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை-மத்திய அரசு அறிவிப்பு

Tamil Mint

தடுப்பூசி போட்டுக்கொண்டால் இரண்டு ஆண்டுகளில் மரணமா? உண்மை என்ன?

Lekha Shree

கள்ள சந்தையில் விற்பனையாகும் போலி ரெம்டெசிவிர்! கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

Devaraj

மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Tamil Mint

விவசாயிகள் போரட்டத்துக்கு ஆதரவாக ரூ.7.28 லட்சம் நிதியுதவி வழங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்!

Tamil Mint

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்

Tamil Mint

வந்தே பாரத் திட்டத்தின் கீழ், 32 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி

Tamil Mint

இது கூட சாத்தியமா? – ஒரு வீட்டையே அப்படியே தூக்கிச்சென்ற நாகாலாந்து மக்கள்! | வைரல் வீடியோ

Tamil Mint

பிப்ரவரி 22-ல் புதிய தோற்றத்தில் டாடா சஃபாரி அறிமுகம்

Tamil Mint

பச்சை நிறத்தில் மாறிய கங்கை – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

Lekha Shree