”ஊரடங்கு நேரத்தில் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை” – வெளியான பகீர் ஆய்வு!


2020ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் இந்திய பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைக்கவில்லை என பகீர் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அனைத்து பிரிவு பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். வேளாண் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கின் போது பெண்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.

டாடா கார்னல் நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு ஜர்னல் எக்கனாமியா பொலிட்டியா இதழில் வெளியாகியுள்ளது. அதில், பெண்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு நுண்ணூட்டச் சத்து அதிகம் உள்ள இறைச்சி, முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களை குறைவாக உட்கொண்டதே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

Also Read  ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய தாலிபான்கள்..! வெளியேறும் லட்சக்கணக்கான மக்கள்..!

இந்த ஆய்வானது 155 வீடுகளில் உள்ள பெண்களிடம் எடுக்கப்பட்டது. அதில் 72 சதவீதம் பேர் ஊரடங்கின் போது அங்கன்வாடி சேவைகளைப் பெற இயலவில்லை என்று கூறினர். ஏனெனில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலமாக சத்துமாவு, முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது.

கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் குறைவான அளவு உணவையே உட்கொண்டதாகவும் மற்றும் 95 சதவீதம் பேர் தாங்கள் குறைந்த உணவு வகைகளையே சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர். ஊரடங்கின் போது வைட்டமின் ஏ நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 42 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Also Read  விலங்குகளுக்கிடையே மலர்ந்த காதல்! - காதலர் தின ஸ்பெஷல் ஸ்டோரி!

இந்த நிறுவனம் இதற்கு முன்பு எடுத்த ஆய்வின் முடிவில், இந்திய பெண்கள் தங்கள் வீடுகளில் உள்ளவர்களை விட குறைவான உணவுகளை சாப்பிடுவதாக தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விண்வெளியில் மிதந்த ஜெஃப் பெசோஸ்… ட்ரெண்டாகும் வீடியோ இதோ..!

Lekha Shree

காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு… தாலிபான்கள் கண்டனம்..!

suma lekha

நிலத்தடி நீர் மாசு…! குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்…!

sathya suganthi

துபாயில் நிர்வாண படப் பிடிப்பில் ஈடுபட்ட 12 யுக்ரேனிய பெண்கள்… UAE அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

Devaraj

சூயஸ் கால்வாயில் ‘எவர் கிவன்’ கப்பல் சிக்கியதற்கு ‘மம்மிகளின் சாபம்’ தான் காரணம்?

Lekha Shree

ஆப்கானிஸ்தானை அழிவில் இருந்து தடுத்து நிறுத்துங்கள் : ஆப்கன் கிரிக்கெட் வீரர் உருக்க பதிவு.!

suma lekha

எகிப்து அருகே கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பல்…! மணிக்கு ரூ.2800 கோடி நஷ்டம்…!

Devaraj

‘கோல்டன் கேர்ல்ஸ்’ – 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

Lekha Shree

157 முறை தோல்வி; 158வது முறையாக லைசன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்!

Tamil Mint

“மனிதர்களின் உமிழ்நீர் விஷமாக மாறலாம்” – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Shanmugapriya

உரிமையாளர் மீது தீரா பாசம்… செல்லப்பிராணியின் நெகிழ்ச்சி செயல்..!

Lekha Shree

கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு சேமிப்பு பத்திரம்!

Shanmugapriya