பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை


இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரலை அடுத்து லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் இதன் எதிரொலியாக அந்த நாட்டுக்கான விமான சேவையை  31-ந் தேதி வரை இந்திய அரசு தடை செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து  ஆய்வு செய்தார்.

Also Read  முதியவர்களின் இலவச பேருந்து பயணங்களுக்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்படும் - போக்குவரத்து கழகம்

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். லண்டனில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் வந்துள்ளன. பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அந்நபர் வீட்டு தனிமையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். கொரோனா உறுதியான நபரின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகே அது வீரியமிக்க கொரோனாவா அல்லது வீரியமில்லாத கொரோனாவா என்பது தெரியவரும்” என கூறினார். 

Also Read  தமிழக அரசில் அடுத்தடுத்து அதிரடி…! புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள்..!

மேலும் இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

பொதுமக்கள் முககவசம் அணிவது, தனி மனித இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Also Read  "தேர்வு உயிரை விட பெரிது அல்ல" - நடிகர் சூர்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கடல் நீர்மட்டம் உயர்ந்தும் திறக்காததால் பாம்பன் ரயில் பாலத்தில் மோதிச் சென்ற படகுகள்!!

Tamil Mint

நெல்லை, தூத்துக்குடியில் ராகுல் காந்தி இன்று பரப்புரை!

Lekha Shree

பரோட்டா சாப்பிட நபர் மாரடைப்பால் மரணம்… அதிர்ச்சியில் போலீஸ்!

suma lekha

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

சிங்கப்பூரில் இருந்து 248 காலி சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழக அரசு!

Shanmugapriya

’சமூகநீதியை வழங்கிவரும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜக கொண்டாடுகிறது” – அண்ணாமலை பாஜக..!

suma lekha

கோயில் வளாகத்தில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து கொலை செய்த ஜோதிடர்: திடுக்கிடும் தகவல்கள்

Tamil Mint

திரையரங்குகளில் இன்று முதல் மீண்டும் திறப்பு

Tamil Mint

தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

சமூக இடைவெளியை பின்பற்றவில்லை சரவணா ஸ்டோர்ஸ் ?

Tamil Mint

நாளை செய்தியாளர் சந்திப்பு: ஓபிஎஸ் சூசகம்

Tamil Mint

பேரறிவாளன் விடுதலை – பாமக தலைவர் ராமதாஸ் தமிழக ஆளுநருக்கு கண்டனம்!

Tamil Mint