a

கொரோனாவால் மரித்து போன மனிதம் – கண்முன்னே தந்தையை பறிகொடுத்த மகளின் கதறல்…!


ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோயனபெட்டா கிராமத்தை சேர்ந்த ஆசிரிநாயுடு, விஜயவாடாவில் தனது குடும்பத்தினருடன் கூலி வேலை செய்து வந்தார்.

திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட இவருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், கொரோனா அச்சத்தால், கிராமத்தினர் ஆசிரிநாயுடு குடும்பத்தை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு குடிசையில் தங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆசிரிநாயுடு உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் இல்லை என்பதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் கிராமத்தினர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Also Read  மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு? - ஒரே நாளில் 3 ஆலோசனைக் கூட்டத்தை நடத்தும் பிரதமர்…!

கொரோனா தீவிரம் அதிகரித்து ஆசிரிநாயுடு மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில், தனது தந்தை மூச்சு விட முடியாமல் துடித்ததை பார்த்து வேதனை அடைந்த அவரது மகள் தண்ணீர் எடுத்துக்கொண்டு தந்தை அருகே ஓடிய காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மனைவி, மகளை தன்னிடம் வரவேண்டாம் என்று ஆசிரிநாடு கதறி போதிலும் அவரது மகள் அருகே சென்று அவரது வாயில் தண்ணீர் ஊற்றினர். ஆனால் சில நிமிடங்களிலேயே மகள், மனைவி கண்ணெதிரே ஆசிரிநாயுடு பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read  பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்...!

இதை கிராம மக்கள் சுற்றி நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்களே தவிர கொரோனா அச்சத்தால் யாரும் அருகே சென்று உதவவில்லை. கொரோனா அச்சம், அனைவரிடத்திலும் மனிதத்தை கொன்றுவிட்டதோ என்ற கேள்வியை இச்சம்பவம் எழுப்பி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விமான கட்டணங்கள் 30 சதவீதம் உயர்வு – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

Tamil Mint

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

எல்லைப் பிரச்னை: சீனாவுடன் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தை

Tamil Mint

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!

Lekha Shree

வரலாற்றில் முதன்முறை – சட்டப்பேரவைத் தேர்தலில் திருநங்கை போட்டி

Devaraj

டெல்லியில் ஒருமணி நேரத்துக்கு 12 பேர் பலியாகும் அவலம் – பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

காங்கிரஸ் இப்போது பலவீனமாக உள்ளது – சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத்

Tamil Mint

“ஒரு வருடமாக உடல் உறவில் ஈடுபடவில்லை” – கணவன் மீது எப்ஐஆர் பதிந்த மனைவி!

Shanmugapriya