தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்


அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அதிவேகமாக பரவிய கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. 

இதனிடையே இங்கிலாந்தில் பரவிய புதிய வகை கொரோனா தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளதாக தகவல் வந்த நிலையில், அரசு பிரிட்டனில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

Also Read  வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய 'நறுவீ ' மருத்துவமனை திறப்பு!

அப்போது, “கொரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல் களத்தில் நின்று செயல்பட்டு வருகிறோம். தற்போது வரை 5 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 1,600 படுக்கைகள் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து 1438 பேரில் 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 120 தனிப்படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதமாக பிரிட்டனில் இருந்து தமிழ்நாடு வந்தவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது; பிரிட்டன் வைரஸ் பற்றி அச்சம் வேண்டாம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் ஊரடங்கு கொண்டுவர அவசியமில்லை” என கூறினார்.

Also Read  தமிழகத்தில் நீட் தேர்வு விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை குறைவு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமைச்சர் கார் மீது சரவெடியை தூக்கி வீசி அட்டகாசம் செய்த அமமுகவினர்…!

Devaraj

மதுரை அருகே தீயணைப்புப்பணியாளர் இருவர் பலி

Tamil Mint

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு!

Lekha Shree

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

ஜெயலலிதாவை அடுத்து உருவாகிறது எம்.ஜி.ஆரின் பயோபிக்?

Lekha Shree

தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக ‘தோனி’ நியமனம்..!

Lekha Shree

டாஸ்மாக் இன்று முதல் திறப்பு – கமல்ஹாசன் சொன்ன பஞ்ச் டயலாக்

sathya suganthi

“மகாத்மா காந்தி எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார்” : ராகுல் காந்தி எம்.பி. புகழாரம்.!

mani maran

அதிமுக செயற்குழுவில் 15 பரபரப்பு தீர்மானங்கள்

Tamil Mint

சென்னையில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை தந்த பயிற்சியாளர் – அதிர வைக்கும் தகவல்கள்

sathya suganthi

நடிகர் விவேக் கடிதத்திற்கு பிரதமர் இந்திராகாந்தி பதில்…! மிரட்சியான அனுபவத்தை பகிர்ந்த விவேக்…!

Devaraj

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint