a

கோவிஷீல்டு+கோவேக்சின் : உ.பி. அரசு மருத்துவமனையில் அரங்கேறிய குளறுபடி


உத்தர பிரதேச மாநிலத்தில் கிராம மக்கள் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்டும், 2-வது டோஸாக கோவோக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோ-டெக் தயாரிக்கும் கோவேக்சின் ஆகியவை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

Also Read  தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

இரண்டு தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு டோஸ்களாக பயன்படுத்தப்படுகிறது. முதல் டோஸின்போது எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்துகிறமோ, 2-வது டோஸின்போது அதைத்தான் செலுத்த வேண்டும்.

ஒருவேளை மாற்றி எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்? என்ற கேள்விக்கு தேவையில்லாத விசப்பரீட்சை என மருத்துவ வல்லுனர்கள் கூறி அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.

Also Read  கொரோனா உச்சத்தை இந்தியா கடந்துவிட்டது: நிபுணர் குழு

ஆனால் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தின் 20 நபர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆதாஹி கலன் என்ற கிராமத்தை சேர்த்த 20 பேர் பாத்னி ஆரம்ப சுகாதாரமையத்தில் கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் டோஸாக கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி 2-வது டோஸ் செலுத்த செல்லும்போது கோவேக்சின் தடுப்பூசியை சுகாதார ஊழியர்கள் செலுத்தியுள்ளனர்.

Also Read  ரெம்டிசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு தடை! - மத்திய அரசு அதிரடி

இந்த தவறு கவனக்குறைவாக ஏற்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் 20 பேரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சித்தார்த்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

மகாத்மா காந்திக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி

Tamil Mint

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

பழிவாங்குவதில் இப்படி ஒரு ரகமா? – 18 ஆண்டுகளாக நைட்டியில் உலா வரும் நபர்! ஏன் தெரியுமா?

Lekha Shree

டெல்லியில் கடும் குளிரில் விவசாயிகளின் அனல் கிளப்பும் போராட்டம் – இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்.

Tamil Mint

கழிவறை கூட இல்லாத அறை – காதலுக்காக 10 ஆண்டாக ஒளிந்திருந்த பெண்…!

sathya suganthi

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!

Shanmugapriya

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன

Tamil Mint

ஒரே தேசம், ஒரே தேர்தல் திட்டத்துக்கு மக்களிடம் ஆதரவை திரட்ட பா.ஜ.க முடிவு

Tamil Mint