a

பயோ பபுளில் கணவர்… கண்ணாடி கேலரிக்குள் மனைவி… கிரிக்கெட் வீரரின் வைரல் புகைப்படம்!


பயோ பபுளில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவிக்கு முத்தமிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. இதுவரை 25 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன.

இதில் 10 புள்ளிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி அணியும் 3வது இடத்தில் பெங்களூரு அணியும் நான்காவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளன.

இந்த நிலையில் 14வது ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டி நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 18.3 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது மனைவி தேவி ஷெட்டியுடன் பேசினார். அவர் பயோ பபுளில் இருப்பதால் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்த தடுப்புக்கு நடுவே தனது மனைவிக்கு அன்பாக முத்தமிட்டார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.


Also Read  6 பால் 6 சிக்ஸ் - இலங்கையை போட்டுத் தாக்கிய போலார்ட்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree

ஐபிஎல் 2021: மும்பை அணிதான் சாம்பியன் – சொல்வது யார் தெரியுமா?

Lekha Shree

ராஜஸ்தான் – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போர்; மனங்களை வென்ற சஞ்சு சாம்சன்!

Devaraj

டெல்லி – பெங்களூரு இன்று பலப்பரிட்சை!

Jaya Thilagan

யார் யாருக்கு ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம்? ஒரு அலசல் ரிப்போர்ட்..

Jaya Thilagan

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree

ஒரு ரன்னில் டெல்லி கேப்பிடல்ஸ் தோல்வி – அதிர்ச்சி கொடுத்த ஆர்.சி.பி.

Jaya Thilagan

வார்னருக்கு செக் வைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத்! வெளியில் உட்கார வைக்கப்படுவாரா – புதிய கேப்டன் யார்?

Lekha Shree

வெற்றி நடை போடும் சி.எஸ்.கே. – 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Jaya Thilagan

என்னை யாரும் குறை சொல்லக்கூடாது – எம்.எஸ். தோனி ஓபன் டாக்!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பலப்பரிட்சை!

Jaya Thilagan

ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி இன்று பலப்பரீட்சை! வெற்றியை சுவைக்குமா சிஎஸ்கே?

Lekha Shree