“தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை!” – சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன்..!


ஐபிஎல் 2021 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து சென்னை அணியின் நிர்வாகக் குழு சார்பில் ஐபிஎல் கோப்பையை சேனனி தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.

இந்த பூஜை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன், “எங்கள் நிறுவனம் திறக்கப்பட்டு 75 ஆவது வருடத்தில் கோப்பையை கைப்பற்றியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை வாங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றுவோமா என்கிற சந்தேகம் இருந்தது.

ஆனால் தோனி நிச்சயம் சென்னை அணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். தற்போது அதேபோல் நடந்து உள்ளது.

Also Read  ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் ஹர்திக் பாண்டியா இருக்கும் போது உனக்கென்ன கவலை? - விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய லக்ஷ்மன்!

உலக கோப்பை போட்டி முடிந்ததும் தோனி சென்னை வருவார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. வெற்றி கோப்பையை முதல்வரிடம் தோனி கொடுக்கவுள்ளார்.

சேப்பாக்கம் மைதானத்தில் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளோம்” என கூறினார்.

Also Read  PIPETTE பயன்படுத்த வேண்டாம்...! 12-ம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கான கொரோனா தடுப்பு நெறிமுறைகள்...!

அதைத்தொடர்ந்து, “வரும் ஐபிஎல் ஏலத்தில் தோனி இடம் பெறுவாரா” என்ற கேள்விக்கு, “சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை. தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை.

ஐபிஎல் ஏலத்தில் யார் யாரை தக்க வைக்க வேண்டும் என்பதை பிசிசிஐ விதிமுறையை வைத்து அப்போது முடிவு செய்வோம்” என தெரிவித்தார் சீனிவாசன்.

Also Read  "11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழப்பு..!

suma lekha

தே.மு.தி.க செயலாளர் தி.மு.கவில் இணைந்தார்

Tamil Mint

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு செல்லும் ஸ்டெர்லைட்

Tamil Mint

கொரோனாவுக்கு தமிழக அரசு இது வரை செய்துள்ள செலவு எவ்வளவு தெரியுமா?

Tamil Mint

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree

‘பப்ஜி’ மதன் வழக்கு: குண்டாஸை உறுதி செய்தது அறிவுரைக்கழகம்..!

Lekha Shree

ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

Tamil Mint

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு? – முதலமைச்சர் இன்று ஆலோசனை!

Lekha Shree

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

நடராஜனை கொண்ட இந்திய அணி தோற்றதாக சரித்திரம் இல்லை!

Lekha Shree

அடுத்த அதிர்ச்சி.. இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்..

Ramya Tamil