a

சிஎஸ்கே வின் மெர்சல் ஆட்டம் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு தோல்வி!


மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12-வது ஐபிஎல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டு பிளெசிஸ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர். கடுமையாக திணறிய கெய்க்வாட் 10 ரன்களில் நடையை கட்ட, பின்னர் வந்த மொயின் அலி டு பிளெசிஸ் உடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறப்பாக விளையாடிய டு பிளெசிஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொயின் அலி 20 பந்துகளில் 26 ரன்னிலும் சுரேஷ் ரெய்னா 18 ரன்னிலும் விடைபெற்றனர். அம்பத்தி ராயுடு 27 ரன்கள் ஜடேஜா 8 ரன்கள் தோனி 18 ரன்கள் என கணிசமான ரன்களுடன் சென்னை வீரர்கள் நடையை கட்ட தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய சாம் கரன் மற்றும் டுவைன் பிராவோ கடைசி ஓவர்களில் தாறுமாறாக ஆடினர்.

பிராவோ 8 பந்துகளில் 20 ரன்கள் விளாச சாம் கரன் 6 பந்துகளில் 13 ரன்கள் விளாசி வெளியேறினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது.

Also Read  உட்றாதீங்க எப்போ - வெளிநாட்டு வீரர்களுக்கு வலைவீசிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. இருப்பினும் சென்னை அணி சிறப்பாக பந்து வீச ஓரா 14 ரன்னிலும் அதிரடி நாயகனான கேட்டேன் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும் வெளியேறினார். மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் 49 ரன்களில் ரவீந்திர ஜடேஜா பந்தில் கிளீன் பவுல்ட் ஆகி நடையை கட்டினார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரியான் பராக், ஷிவம் துபே, டேவிட் மில்லர் ஆகியோர் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ராகுல் திவேட்டியா 20 ரன்னில் வெளியேற கிறிஸ் மோரிஸ் டக் அவுட்டாகி நடையை கட்டினார். ஒருகட்டத்தில் கடைசி வரை போராடிய உனத்கட் வேறு வழியில்லாமல் 24 ரன்களில் வெளியேற ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. சென்னை அணி தரப்பில் மொயின் அலி அதிக பட்சமாக 3 ஓவர்களை வீசி 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Also Read  ஹனுமா விஹாரியை மிஸ் செய்கிறேன் - மனம் திறந்த புஜாரா!

சாம் கரன், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஷர்துல் தாகூர் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அட்டகாசமாக பீல்டிங் செய்த ஜடேஜா நான்கு முக்கிய கேட்ச்களை பிடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். ஆட்டநாயகனாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஜொலித்த இங்கிலாந்து நட்சத்திரம் மொயின் அலி தேர்வு செய்யப்பட்டார். சென்னை அணியின் இந்த வெற்றி இணையத்தில் பலரையும் கொண்டாட வைத்து வருகிறது. இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ள சென்னை அணி ஐபிஎல் தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ராஜஸ்தான் அணி ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது நாளை நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன் களம் காண்கிறது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர்த்து விளையாட உள்ளது

Also Read  டெல்லியிடம் பணிந்தது பஞ்சாப்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஐபிஎல் தொடரில் இருந்து அடுத்தடுத்து விலகும் வீரர்கள்…! ரசிகர்கள் ஏமாற்றம்…!

Devaraj

“குட்டி கில்லாடி கலரு கண்ணாடி” இணையத்தில் வைரலாகும் சுட்டிகுழந்தை சாம் கரணின் புகைப்படம்!

Jaya Thilagan

யார் யாருக்கு ஐபிஎல் தொடர் ரொம்ப முக்கியம்? ஒரு அலசல் ரிப்போர்ட்..

Jaya Thilagan

வெற்றியை தூக்கி கொடுத்த கொல்கத்தா – மன்னிப்பு கோரிய ஷாருக்கான்!

Lekha Shree

எம்.எஸ் தோனியின் புதிய சாதனை!

Devaraj

டெல்லி – பஞ்சாப் இன்று மோதல்!

Devaraj

வெற்றிப் பாதைக்கு திரும்புமா கொல்கத்தா?

Jaya Thilagan

ஐபிஎல் தொடரில் கலக்கிய இளம் கேப்டன்கள்…!

Lekha Shree

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj

“நான் வந்துட்டேன்னு சொல்லு” மீண்டும் இணைகிறாரா ஆர்.ஜே. பாலாஜி?

Jaya Thilagan

அட கேன் வில்லியம்சன இறக்கி விடுங்கப்பா!

Devaraj

ஐபிஎல் 2021: மும்பை அணிக்கு தொடரும் சோதனை!

Lekha Shree