அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்…!


அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மதுசூதனன். இவர் ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் அவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார். மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்.

Also Read  சென்னையில் ஆண்களுக்கான கருத்தடை முகாம்கள்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு முதலில் ஆதரவளித்தவர் மதுசூதனன்.

இவருக்கு சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுசூதனனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Also Read  வெளிநாட்டில் மருத்துவ பயின்ற 500 பேர் தமிழகத்தில் பணியாற்ற அனுமதி

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் முழு ஊரடங்கு….!

Lekha Shree

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

தமிழகத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

Tamil Mint

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

Lekha Shree

“காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை” – ஜோதிமணி எம்.பி

Lekha Shree

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்… சற்று முன் சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

HariHara Suthan

அரசுப் பள்ளிகளில் இனி 6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம்

Devaraj

தமிழகத்தில் 7000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree

இந்தி தெரியாது என்றதால் நீங்கள் இந்தியரா என்ற கேள்வி?

Tamil Mint

ரெம்டெசிவிர் முன்பதிவுக்கான இணையதள வசதி அறிமுகம்

sathya suganthi

சீமானுக்கு எதிராக தம்பி ஒருவர் போட்ட வீடியோ – ட்ரெண்டான #சீமான்ணேரூம்போட்டியா ஹாஷ்டேக்

Devaraj