பா.ஜ.க.வால் தான் அதிமுக தோற்றது…! சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு…!


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை ஏற்று பேசினார்.

அப்போது, தி.மு.க.வினர் மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளதாக கூறினார்.

தி.மு.க. தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெருவாரியான பொதுமக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை என்றும் சந்தர்ப்ப சூழ்நிலை, மாற்றத்தை விரும்பிய மக்கள், நாம் எடுத்த முடிவுகள் ஆகியனவும் காரணமாயிற்று என்றும் குறிப்பிட்டார்

தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. கூட்டணி தான் என்றும் இதனால் முழுமையாக நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை இழந்து விட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் மக்களுக்கு நம் மீதோ, நம் இயக்கத்தின் மீதோ எந்த வருத்தமும், கோபமும் இல்லை எனக் கூறிய அவர், கொள்கை ரீதியாக அவர்கள் பா.ஜ.க.வோடு முரண்பட்டு இருந்தார்கள் என்றும் அவர்கள் பா.ஜ.க.வை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

இதனால் நாம் அவர்களோடு வைத்த கூட்டணியால் மிகப்பெரிய இழப்பை நாம் சந்திக்க நேரிட்டது எனக்கூறி சிவிசண்முகம், இதற்கு ஒரே உதாரணம் நான் போட்டியிட்ட விழுப்புரம் தொகுதி என்றார்.

பா.ம.க. கட்சியோடு கூட்டணி இருந்த காரணத்தால் நாம் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்குகளை நம்மால் பெற முடியவில்லை என்றும் அது அவர்களுக்குள் கொள்கை ரீதியான முரண்பாடு என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் கூட்டணி கட்சியில் எல்லோரும் நன்றாக செயல்பட்டோம் எனக் கூறிய சி.வி.சண்முகம், அதனால் தான் இந்த நிலையிலும் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்றார்.

Also Read  ஆண்டிப்பட்டி தொகுதி: திமுக வேட்பாளர் அண்ணன்... அதிமுக வேட்பாளர் தம்பி...! சபாஷ் சரியான போட்டி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அயனாவரம் ரவுடி என்கவுண்டர்- 4 காவலர்கள் இடமாற்றம்

Tamil Mint

நடிகையின் பாலியல் புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு

sathya suganthi

வெளியானது மக்கள் நீதி மய்யம் கூட்டணி தொகுதிப் பங்கீடு விவரம்!

Shanmugapriya

கடைகளை திறக்க அழுத்தம் கொடுத்ததால் வெளியான அரசாணை” : மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வியாபாரிகள்!

Tamil Mint

தேசிய கொடி ஏற்றிய திருநங்கை! திருச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Tamil Mint

தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: பூங்கோதை பரபரப்பு அறிக்கை

Tamil Mint

டிராபிக் ராமசாமிக்கு கண்ணீர் வணக்கம் – சீமானின் உருக்கமான அஞ்சலி

sathya suganthi

தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை… காரணம் என்ன….?

VIGNESH PERUMAL

இன்று பிரதோஷம்: ஆன்லைன் மூலம் சிவ தரிசனம் செய்யலாம்

Tamil Mint

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை தொடக்கம்

Tamil Mint

“2ம் அலை கைமீறிவிட்டது” – கொரோனாவின் கோரப் பிடியில் தமிழகம்!

Lekha Shree

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj