a

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!


கொரோனா வைரஸின் 2ம் அலை நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வரும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்தவகையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 6-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.வி. சண்முகம், தீவிர பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.

Also Read  உலகளவில் இல்லாத உச்சம்…! ஒரே நாளில் 4 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு…!

இதனிடையே அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் உடல் வலி ஏற்பட்டதால், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.

அதில், அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read  தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி

இதனிடையே அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவரும் அதிமுக எம்.பி.யுமான வைத்திலிங்கத்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த அதிமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடையே இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read  தஞ்சை அருகே 56 மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா – பள்ளி மூடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பாடத்திட்டங்கள் குறைப்பு!

Tamil Mint

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்த முகாம் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

Tamil Mint

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

கொரோனாவுக்கு எதிராகப் போராடுவோம் – விராட் கோலி அட்வைஸ்!

Devaraj

“எனக்கே விபூதி அடிக்க பாக்குறல” மொமெண்ட்… இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

Lekha Shree

தன் பிறந்த நாளில் விஜய்-ஸ்ருதியை சவாலுக்கு இழுத்த மகேஷ்பாபு !

Tamil Mint

தனியார் பள்ளி கல்வி கட்டணம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Tamil Mint

“தமிழ்நாட்டின் வெப்பத்தை சமாளிக்க சிறப்புத் திட்டம் வேண்டும் ” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Shanmugapriya

கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

Lekha Shree

கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரி ரூபா அதிரடி டிரான்ஸ்பர்

Tamil Mint

பாலியல் வழக்கில் சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!

Lekha Shree

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj