a

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2.59 லட்சமாக பதிவு..!


கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால். மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,321,089 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180,550 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,108,582 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2.59 லட்சமாக உள்ளது. நேற்றைய தினம் 2.73 லட்சமாக இருந்தது தினசரி பாதிப்பு எண்ணிக்கை. நேற்றை விட இன்று சுமார் 15,000க்கு குறைவாக தொற்று பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 1,761 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நேற்றை விட இன்று பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் காணப்படும் ஆபத்தான கருப்பு பூஞ்சை தொற்று.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

Ramya Tamil

இறந்த தாய் உடலருகே குட்டி யானை பாசப்போராட்டம்… கேரளாவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Tamil Mint

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்படும் ஹஜ் கமிட்டி இல்லங்கள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வேண்டி ஃபைசர் நிறுவனம் கோரிக்கை

Tamil Mint

அனைவருக்கும் இலவச தடுப்பூசி: பீகார் தேர்தலில் பாஜக அதிரடி

Tamil Mint

புனேவில் உள்ள சீரம் தடுப்பூசி நிறுவனத்தில் திடீர் தீ; 5 பேர் உயிரிழந்த சோகம்!

Tamil Mint

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி!

Jaya Thilagan

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்க முடியாது… அரசு கவனமுடன் தான் செயல்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்!

Tamil Mint

நீட் தேர்வு தேதியை அறிவித்த தேசிய தேர்வு முகமை!

Jaya Thilagan

பிரதமர் நரேந்திரா மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Tamil Mint