a

உச்சத்தில் கொரோனா – 3 லட்சத்தை நெருங்கிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை…!


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது. கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

ஆனால், நிலைமை கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீரியமாக தொடங்கியது.

அதன் விளைவாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு சதவிகிதம் அதிகமாக உள்ளது. அதனால், மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also Read  அதிகாரிகள் உள்ளதை உள்ளபடி முன்வைத்து பிரச்சினைகளை சந்திக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,616,130 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 182,570 ஆகவும் உள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,276,039 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து 2.95 லட்சமாக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 2,023 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது நாடு முழுவதும் 1.56 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அதிகரிக்கும் கொரோனா பரவலால் 10 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு…!

Lekha Shree

தகவல்களை திருட வாய்ப்பு – வாட்ஸ் ஆப் பயனர்களுக்கு எச்சரிக்கை…!

Devaraj

போலீஸார் பதிந்து வைத்த ஆணிகளுக்கு அருகிலேயே பூச்செடி நட்டு வைத்த விவசாயிகள்!

Tamil Mint

இந்தியா: 2021 ஆம் ஆண்டில் 300 மில்லியன் டோஸ் ஸ்பூட்னிக் வி தயாரிப்பு

Tamil Mint

“இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது” – உலக சுகாதார அமைப்பு

Lekha Shree

பிச்சைக்காரர்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் முதலிடம் பிடித்த மேற்கு வங்கம்…!

Devaraj

“கோழிகள் முட்டையிடவில்லை” – போலீஸிடம் புகாரளித்த நபர்!

Shanmugapriya

மின் கட்டணம் உயர்வு.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Ramya Tamil

அயோத்தியில் பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் தங்களுக்கு பங்கு உண்டு என 2 பெண்கள் வழக்கு!

Tamil Mint

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்..! விமானத்தில் டன் கணக்கில் வந்தடைந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள்…!

Devaraj

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட இதுவரை வசூலான நன்கொடை குறித்த விவரம் வெளியீடு!

Shanmugapriya